புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* தயாரித்தவைக்கு அமுலாக்க தெரியாதா?

நல்லிணக்க ஆணைக்குழு மூலமாக அறிக்கை தயாரித்த அரசாங்கத்துக்கு அதை அமுல்படுத்த அமெரிக்கா சொல்லிக் கொடுக்க வேண்டுமோ? ஏன் இந்த உலக பொலிஸ்காரன் வேலை? முஸ்லிம் நாடுகளை அடக்கின. மமதையில இப்ப ஆசிய நாட்டுப் பக்கமும் தன்ர ஆதிக்கத்தைச் செலுத்த சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற அமெரிக்காவுக்கு எங்கட சனமும் சிலதுகள் எட்டப்பன் வேலையைச் செய்துவருகினம். அவைக்கு இப்ப தெரியாது, கொஞ்சக் காலத்துக்குப் பிறகுதான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது புரியவரும்.

* ஹினிதி யின் அனுபவம், ஆற்றல், துணிவு

சம்பந்தன் ஐயாவின் அனுபவமும், சுமந்திரனின் ஆற்றலும், ஸ்ரீதரனின் துணிவும் இணைந்து இப்ப தமிழ்க் கூட்டமைப்புக்கு புதிய புத்திசாலித்தனமான எதிர்காலத்தைக் கொடுத்திருக்குது, ஜெனீவாவுக்கு இவை போகாமலிருக்க எடுத்த முடிவை வைத்தே தலைவராக வர முயற்சித்த சுரேசும் செயலாளராக வரத்துடித்த அரியத்தாரும் மூக்குடைபட்டு இருக்கினம். சரியோ, பிழையோ சனம் தலைமையோட நிற்கும் போது கட்சியை தருணம் பார்த்துக் கூறுபோடுவது கடினம். மன்னிப்புக் கோரி சமாளித்து சேராவிட்டா அடுத்த தேர்தலில அம்போதான்!

* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை

அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டே அரசாங்கத்தில அங்கம் வகிப்பது இப்ப பல கட்சிகளுக்கு கை வந்த கலை. ஆனா சனத்துக்கு உந்த நடிப்பெல்லாம் இப்ப நல்லாத் தெரியும். கிழக்கில தமக்கு அபிவிருத்திக்கு அரசாங்க கட்சி அமைச்சர்களுக்கும், எம். பிக்களுக்கும் வழங்குகிற நிதி மாதிரி வழங்குவதில்லை என ஒருகட்சி அடிக்கடி குரல் எழுப்பி வருகுது. ஆனா யாருமே அதைக் கண்டு கொள்வது கிடையாது. மலையகத்திலயும் ஒருவர் விலகுவேன் என்று அடிக்கடி கூறுவார். ஆனா விலகமாட்டார். உண்மையா நடந்தா எல்லாமே தேடிவரும். நாம் கேட்கு அலையத் தேவையில்லை.

* கலாசாரத்தை சீரழிக்கும் இணையங்கள்

நாட்டில இன்று நடக்கிற விசயங்களைப் பார்த்தா மனதுக்குப் பாரமா உள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எல்லாமே எங்கட தமிழ்ப்பட சினிமா பாணியில் நடக்குது. எப்படி இப்படியெல்லாம் நடக்க முடியாது எண்டு ஆராய்ந்தா உந்த இணையத்தளங்கள் பார்க்கிறதால வாற வினை. அதைவிட இப்ப சினிமாப் படங்களே எப்படியெல்லாம் தப்புப் பண்ணுவது எண்டு விளக்கமா சொல்லிக் கொடுக்குது. இணையத்துக்கும், சினிமாவுக்கும் முடிவு கட்டாவிட்டா எதிர்காலத்தில விளைவுகளும் பாரதூரமாத்தான் இருக்கப்போகுது!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.