புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 6ந் திகதி காலை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு மிக கோலாகலமாக கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஆரம்பமாகவிருக்கிறது.

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் அரங்கில் 6ந் திகதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் ஆரம்பதின நிகழ்வு ஆரம்பமாகவிருக்கிறது.

வெள்ளவத்தை காலி வீதியில் கொமர்சல் வங்கி அருகில், ஊர்வலம் ஆரம்பமாகி அதிதிகள்- எழுத்தாளர்கள், படைப்பாளர், கலை, இலக்கியவாதிகள் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் புடைசூழ, பாடசாலை மாணவ/ மாணவிகளின் அணிவகுப்புடன் கொழும்புத் தமிழ்ச் சங்க வளாகத்தை வந்தடையும். காலை 11.15க்கு அதிதிகளின் மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகும். தமிழ் மொழி வாழ்த்தினை அருணந்தி ஆரூரன் பாட மாநாட்டுக் கீதத்தை திருமதி மதுரா பாலச்சந்திரன் இசைப்பார். வரவேற்புரையை இலங்கை இணைப்பாளர் வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன் நிகழ்த்துவார். தொடக்கவுரையை ஒன்றிய பிரதம அமைப்பாளர் எல். முருக பூபதி ஆற்றுவார்.

தலைமையுரையினை பேராசிரியர் சபா ஜெயராசா நிகழ்த்த வாழ்நாள் பேராசிரியர் கா. சிவத்தம்பி வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பு செய்வார்.

வரவேற்பு நடனத்தை திவ்யா சிவனேசனின் அபிநய சேத்ரா நடன பள்ளி மாணவிகள் வழங்குவார்கள். மாநாட்டின் சிறப்பு மலரை வைத்திய கலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வெளியிட சிறப்பு மலர், மற்றும் சஞ்சிகைகளின் முதற்பிரதிகளை புரவலர் ஹாசிம் உமர் பெற்று கெளரவம் செய்வார்.

அதிதிகளின் சிறப்புரைகளோடு முதல்நாள் காலை நிகழ்வு நிறைவு பெறும். இந்நிகழ்வுகளை கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தொகுத்து வழங்குவார். முதல்நாள் முதல் அரங்கு-1 பத்திரிகை உலக ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம் அரங்கில் ‘கணனியும் வலைப்பதிவுகளும்’ என்ற தலைப்பில் ஆரம்பமாகும்.

முனைவர் மு. சு. தங்கம் (இந்தியா), வைத்திய கலாநிதி எம். கே. முருகானந்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெறும் இவ்வரங்கின் ஆய்வு மதிப்பீட்டாளர்களாக ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதி இராஜநாயகம், கனடா சி. சிaசுக்கந்தராஜா ஆகியோர் பங்குபற்றுவார்கள்.

மேமன் கவி இணைப்பாளராக செயற்படுபவார். ஆரம்பவுரை தலைமையுரையுடன் ஆய்வுரைகளாக “கணனியில் தமிழ்” என்ற தலைப்பில் கணனிப் பொறியியலாளர் கெ. சர்வேஸ்வரனும் ‘தமிழ் அச்சு வரி வடிவத்துக்கான லிவிஞி முயற்சிகள் என்ற தலைப்பில் செல்வி சபீனா தயானி தயானந்தனும், கணனியும் இணையமும் தமிழ் எழுத்துச் சூழலில் ஏற்படுத்திய மாற்றங்கள்” என்ற தலைப்பில் மு. மயூரனும் “கணனி யுனிகோட் ஸிniணீoனீலீ தமிழ் மொழியில் ஏற்படுத்திய தாக்கங்கள்” என்ற தலைப்பில் கணனி விரிவுரையாளர் நா. பாலச்சந்திரனும் கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள்.

இவற்றைத் தொடர்ந்து கலந்துரையாடல், தொகுப்புரை, சான்றிதழ்களை வழக்கல் என்பன இடம்பெறும். நிறைவாக, சிறுவர்களுக்கான ஒளிப்படமான பாப்பா பாரதி காண்பிக்கப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.