புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

விருதகிரி

விருதகிரி

ஸ்கொட்லாந்தில் கதை துவங்குகிறது. ஸ்கொட்லாந்தில் பொலிஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் விஜயகாந்த், அந்த நாட்டிற்குள் ஊடுருவும் சில தீவிரவாதிகளைத் தனது புத்திசாலித்தனத்தாலும் புஜபலத்தாலும் பிடிக்கிறார்.

இதற்காக ஸ்கொட்லாந்த் பொலிஸ் பாராட்ட, பாராட்டு மழையில் நனைந்தபடி தமிழகத்திற்கு வருபவரிடம் ஒரு அரவாணி தன்னுடன் இருந்த ஒரு அரவாணியை சில நாட்களாகக் காணவில்லை, பொலிஸிடம் புகார் கொடுத்தும் பயன் இல்லை.

நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று முறையிடுகிறார். உடனே தனது புலன் விசாரணையை துவங்கும் கேப்டன் அரவாணிகளைக் கடத்தி அவர்களுடைய உறுப்புகளை விற்கும் கூட்டத்தைக் கண்டுபிடித்து சிறையில் தள்ளுகிறார்.

இப்படி சாதனைக்கு மேல் சாதனை செய்துவரும் விஜயகாந்த்திற்கு சோதனையாக அமைகிறது அவருடைய உறவுக்காரப் பெண்ணான நாயகி மாதுரியின் கடத்தல் சம்பவம்.

மேல் படிப்பிற்காக ஆஸ்திரேலியா செல்லும் மாதுரி, ஆஸ்திரேலியத் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார்.

உடனே அவரைக் காப்பாற்ற ஆஸ்திரேலியா செல்லும் விஜயகாந்த் எப்படி நாயகியை மீட்கிறார் என்பதுதான் இறுதிக் காட்சி.

வழக்கமான விஜயகாந்த் படமாகத்தான் ஆரம்பிக்கிறது. கூடுதலாக ரெண்டு லைனுக்கு ஒரு முறை பஞ்ச் டயலாக் பேசி, டைட் க்ளோசப்பில் சிவந்த கண்களுடன் பேசுகிறார்.

அதையெல்லாம் மீறி வில்லன்கள் கூட சண்டைப் போடுவதற்கு முன் ஒரு அரை மணி நேரம் நிறுத்தி நிதானமாக விஜயகாந்தின் அரசியல் பார்வையைப் பற்றியும், அவரது கொள்கைகளைப் பற்றியும் அவரைப் பேச வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள் என்பது போன்ற ஒருசில இடர்பாடுகளைத் தவிர, இன்ட்ரஸ்டாக பொழுது போக்க வைத்திருக்கிறார்கள்.

உலக பொலிஸெல்லாம் சல்யூட் அடிக்கும் பொலிஸ் பெரிய ஆபீசர் விருதகிரி, ஒப்பனிங் சீனே. ஸ்கொட்லாந்து யார்டு பொலிஸ¤க்கு இந்தியா பொலிஸ் திறமையைக் காட்டி கலக்கியிருக்கிறார். அந்த ஸ்பிரிங் போட்டு சண்டை நல்ல கற்பனை, ஆனால் அத்தனை பேரையும் மனுஷன் ஒத்துக்கையிலேயே சமாளித்து பொறி கலங்க வைப்பது அட்டகாச காமெடி.

வழக்கமாய் பாகிஸ்தானிய தீவிரவாதியாக இருந்தாலும் தமிழிலேயே பேச வைக்கும் விஜய்காந்த் இப்படத்தின் மூலம் கே. டி.வி இங்கிலீஷ் டப்பிங் முறையை பயன்படுத்தி, எல்லா வில்லன்களுக்கும் லாஜிக்கலா தமிழில் டப் செய்துவிட்டிருக்கிறார். சப்டைட்டில் படிப்பதை விட நல்ல தாட்.

என்னதான் ‘டேக்கன்’ படத்தை உல்டா செய்திருந்தாலும் அதையெல்லாம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிரச்சினையோடு இணைந்து, அரவாணிகள், உடல் உறுப்புத் திருட்டு, வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் பிரச்சினை என்ற எல்லாவற்றையும் கலந்து கட்டியதில் நல்ல சுர்ருன்னு ஏத்தித்தான் விட்டிருக்கிறார்கள். நிஜமாகவே படத்தின் இரண்டாம் பாகம் படு விறுவிறுப்பு.

மன்சூர் அலிகான், சண்முகராஜன், அருண்பாண்டியன் உள்ளிட்ட பெரிய வில்லன் கும்பல். நாயகி மாதுரிக்கு சொல்லும் அளவிற்கு வேலை கிடையாது. பீலி சிவம், கலைராணி, சந்தான பாரதி போன்றோரும் உள்ளனர். கே. பூபதி ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

ஆஸ்திரேலியா என்று படம் பூராவும் மலேசியாவில் படமாக்கியிருப்பது மலேசியா, சிங்கை தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும். தனக்கென ஜோடி என்று ஏதுவும் இல்லாமல்.. தன் வயதுக்கேற்ற சரியான ரோலைத்தான் கேப்டன் செலக்ட் செய்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, இயக்கத்தை மேற்கொண்ட கேப்டன், வசனத்தை மட்டும் வேலுமணி என்பவரின் பெயர் போட்டதற்கு பின் குறிப்பு ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிறது. பெரும்பாலான காட்சிகளில் அந்த உடம்பை வைத்து அலட்டாமல் வெறும் ப்ரேமை ஆட்டியே ஒரு பெரிய பில்டப்பை கொடுத்திருக்கிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.