புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

இவ்வார சிரிப்பு

இவ்வார சிரிப்பு

கௌசினி கருணேஸ்வரன்

நீர்கொழும்பு


மழை தரும் மேகம்!

வானம் எங்கும் மேகக் கூட்டம்
வண்ணக் கோலம் போட்டிடும்
தானம் தருமம் உலகம் எங்கும்
தழைக்க மழையைத் தந்திடும்!

விண்ணில் வந்த மேகம் எல்லாம்
விந்தை செய்து காட்டிடும்
மண்ணில் வாழும் மக்களுக்கு
மகிழ்வை அள்ளித் தந்திடும்!

மேகம் எல்லாம் மோதி மோதி
மின்னல் மின்னித் துள்ளிடும்
வேகமோடு இடியும் சேர
வெள்ளிக்கோடு பாய்ந்திடும்!

கல்லொளுவை பாரிஸ்


விசேட பெயர்களால் அழைக்கப்படும் நாடுகள்

* ஐரோப்பாவின் தொட்டில் - சுவிட்சர்லாந்து

* ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி

* இருண்ட கண்டம் - ஆபிரிக்கா

* உலகின் கூரை - தீபெத்

* ஆயிரம், ஏரிகள் கொண்ட நாடு - பின்லாந்து

* ஆறுகள் இல்லாத நாடு - சவூதி

அரேபியா

* உலகின் சக்கரைக் கிண்ணம் - கியூபா

* நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு - நோர்வே

* சூரியன் உதிக்கும் நாடு - ஜப்பான்

* யுத்தம் இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

* புனித பூமி - ஜெரூசலம்

எம். என். நுஸ்ரா

தரம் 07 ஈ

பதுரியா மத்திய கல்லூரி,

மாவனல்லை.


ஒன்றாக வாழ்வோம்!

காக்கை கூண்டில் குயில் போல
ரசாக், பாண்டி சேர்ந்திடுவோம்- தினம்
செம்மொழி பேசி பழகிடுவோம்
பிரிவுகள் இல்லாமல் வாழ்ந்திடுவோம்!

பசி பட்டினி போக்கிடுவோம்
மனித நேயம் போற்றிடுவோம்
தமிழர் பண்புகள் கண்டிடுவோம்
இஸ்லாத்தின் மாண்புகளோடு சேர்ந்திடுவோம்!

சகோதர மொழியினை பயின்றிடுவோம்
சகோதரனாய் நாம் மதித்திடுவோம்
சாதி பேதம் மறந்திடுவோம்
சமாதானமாக வாழ்ந்திடுவோம்!

இலக்கியங்கள் இயற்றிடுவோம்
இசைகளில் மிதந்திடுவோம்
இன்பத்தைப் பெற்றிடுவோம்
பிறருக்கு தீங்கு செய்யாது வாழ்ந்திடுவோம்

ஜே. பிரோஸ்கான்

கிண்ணியா


கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற சிந்தனின் “கிழித்துப் போடு” நூல் வெளியீட்டு விழாவின் போது செல்வன் கார்த்திபன், செல்வி தாரனியா மற்றும் செல்வி பிரதீஸா ஆகியோர் முறையே, பாரதியார், ஒளவையார் மற்றும் திருவள்ளுவர் போன்று உடையணிந்து வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.

(படம்: ஏ. மதுரைவீரன்)


கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள ‘கிட்ஸ் பெர்ஸ்ட் ஸ்டெப்’ பாலர் பாடசாலையின் இரண்டாம் ஆண்டு கலைவிழா அண்மையில் மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் நடைபெற்றது. சிறுமிகளின் கலை நிகழ்ச்சியை படத்தில் காணலாம்.

எஸ். ஸ்ரீபாரத்
கிறிஸ்துநாதர் பாலர் பாடசாலை, இங்கிரிய
எம்.எம். மிஸ்காத், தரம்08,
மே/மா/கம்/ குமாரிமுல்லை ம.வி.
பூகொடை
ஏ. ஜி. எம். ஸாஜித், தரம் 07 சி
கா/ ஸாஹிரா தேசிய பாடசாலை
கிந்தோட்டை, காலி.
என். ஏ. எப். மதீஹா,
பாலர் பாடசாலை, நெலுகொள்ளாக்கடை

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.