புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

வினோதச் செய்திகள்

வினோதச் செய்திகள்

ஆச்சரியமான தேர்தல்

1962.10.8ம் திகதி வடகொரியாவில் நடந்த மிக வெளிப்படையான தேர்தல் போல் இதுவரை நடந்ததில்லை. இத்தேர்தலில் நூறு சதவீதமான வாக்குகள் பதிவாகின. ஆச்சரியமென்னவெனில் வாக்காளர் அனைவருமே கொரியாவின் தொழிலாளர் கட்சிக்கே வாக்களித்திருந்தனர்.

பேரரசரின் அந்தப்புரம்

முதல் சீனப் பேரரசரான சின்-i- ஹுவாங்- வி என்பார் கி.மு. 246-210 வரை வாழ்ந்தவர். இவருக்கு 13. 140 மனைவியர்கள் இருந்துள்ளனர். இவர்கள் மூலமாக இவருக்கு 2800 குழந்தைகள் பிறந்துள்ளனர். இவரது அரண்மனையில் பத்தாயிரம் அறைகளுண்டு. 27 வருடகாலத்தில் எந்த அறையிலும் இருமுறை இவர் உறங்கியதில்லையாம்.

பேசாத பாராளுமன்ற உறுப்பினர்

புகழ்பூத்த சேர். ஐசக் நியூட்டன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருமுறை உறுப்பினராக தெரிவாகினர். மக்களவையில் அவர் கழித்த காலங்களில் அவர் வாய்திறந்து எதுவுமே பேசவில்லையாம்.

காதல் அப்பிள்

ஆரம்ப காலத்தில் தக்காளி காதல் அப்பிள் என அழைக்கப்பட்டது. காதலர்கள் இதனையே பரிமாறிப் புசித்துள்ளனராம்.

பதினொரு மூளைகள்

பட்டுப் பூச்சிகளுக்கு பதினொரு மூளைகள் உள்ளன.

ரி - எனும் எழுத்து

ஆங்கில எழுத்துக்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் எழுத்து ரி எழுத்தாகும்.

முத்தம்

ரோமிலுள்ள சந்தேகக் கணவன் மார்களால் கண்டுபிடிக்கப்பட்டதே முத்தமென ரோமானிய எழுத்தாளர் கேட்டோ குறிப்பிடுகிறார். இரகசியமாக மனைவிமார் மது அருந்துகிறார்களோ எனச் சந்தேகித்த கணவன்மார்கள் அதைக் கண்டுபிடிக்க மனைவிமார்களுக்கு முத்தமிட ஆரம்பித்தனர் என்பதே கேட்டோவின் எண்ணமாகும்.

வெங்காயம்

முற்காலத்தில் ஐரோப்பாவில் திருமணஞ் செய்துகொண்டவர்களுக்கு வெங்காயமே பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் வெங்காயம் விலை மதிக்கத்தக்க பொருளாக கருதப்பட்டது. ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்தோரின் கல்லறையின் உட்பக்கத்தில் வெங்காயத்தின் படங்கள் வரையப்பட்டன. சத்தியப்பிரமாணம் செய்ய எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தியுள்ளனர். லத்தீன் வார்த்தையான யூனியோவிலிருந்து ஒன்னியன் எனும் வார்த்தை உருவாகியுள்ளது. உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தும் காய் வெங்காயமாகும்.

இடிதாங்கி

மொரோவியாவில் 1754ல் புரோஹோப் தில்விஷ் என்பவரால் முதல் இடிதாங்கி பொருத்தப்பட்டது.


125 வயதான பூனை

இந்தப் பூனைக்குப் பெயர் ஜேம்ஸ் அதன் உரிமையாளர் 45 வயதான வேய்ன் என்பவர் இவர் ஒரு சிற்றுண்டிச்சாலையின் சொந்தக்காரர் இந்தப் பூனை 1984ல் பிறந்ததாம்.

இருந்தாலும் மனித ஆண்டில் இதன் வயது 125 என்று கூறப்படுகின்றது.

1950களில் புகழ்பெற்ற நடிகர் ஜேம்ஸ் டீனின் நினைவாகவே இந்தப் பூனைக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டதாக அதன் உரிமையாளர் கூறுகின்றார்.

ஒரு முறை கார் ஒன்றில் அடிபட்ட இந்தப் பூனைக்கு ஆயிரம் பவுண் செலவழித்து சத்திரசிகிச்சையும் செய்துள்ளதாக இவர் கூறுகின்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.