புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

தமிழ் மொழியும் சீர்திருத்தங்களும்

தமிழ் மொழியும் சீர்திருத்தங்களும்

உதாரணமாக உயிர் எழுத்து எல்லா மொழிகளிலும் ஐந்து எழுத்துக்களே. அதாவது உயிர்ச் சத்தங்கள் ஐந்தே. தி, ரி, யி, லி, ஸி சத்தகங்களே அவை. ஆனால் தமிழ் மொழியில் 12 உயிர் எழுத்துக்கள் உண்டு. இதனைப் பின்வருமாறு மாற்ற முடியும்.

படம் 1

‘ஆ’ என்ற எழுத்திற்குப் பக்கத்தில் ஏலவே எம்மிடமுள்ள அரவைச் (¡) சேர்த்துக் கொண்டால் ‘ஆ’ சத்தம் வரும். உதாரணமாக ‘அ¡’ என்ற எழுத்தின் மூலம் நெட்டோசை ஏற்படும்.

இஃதே போல இ¡, உ¡, எ¡, ஒ¡, அவ், அய் என மாற்றம் பெறும்.

எல்லாமாக பதின்மூன்றுடன் இந்த ஏழும் சேர்ந்தால் 20 எழுத்துக் குறைந்துவிடும்.

இஃதேபோல உயிர் மெய் எழுத்திலும் பின்வருமாறு சீர்திருத்தங்களைச் செய்ய முடியும்.

படம் 2

கறுப்பு நிறம் தீட்டப்பட்டது ஏலவே சீர்திருத்தம் செய்யப்பட்ட எழுத்துக்கள். சாம்பல் நிறம் தீட்டப்பட்ட எழுத்துக்கள் புதிய சீர்திருத்தத்திற்குட்பட்டவை. தொல்காப்பிய காலத்தில் இன்று இருப்பது போன்ற ஆயுத எழுத்து (ஃ) இருக்கவில்லை.

ஆயுதக் குறியீடாகவே இருந்தது. இதற்கு ஆரம்பமாக தொல்காப்பியச் சூத்திரத்தைக் கூற முடியும்.

‘எழுத்தின் வலதும் இடதும்

மேலும் நிலை இ

எழுத்தொலி இரட்டியும்

குறைத்தும் நலிந்தும்

ஆயுதமுச் செயல்

முக்காற்புள்ளி’

எனத் தொல்காப்பியர் சூத்திரம் கூறுகின்றது.

இஃதே போலத்தான் இன்று நாம் பயன்படுத்தும் செமிகோலன், கிரேக்கர்களிடம் இருந்து இங்கிலீஸ்காரர்களும், இங்கிலீஸ்காரர்களிடம் இருந்து நாமும் கற்றுக் கொண்டோம்.

இன்று நாம் பயன்படுத்தும் கேள்விக் குறி முதலில் 1515 ஆம் ஆண்டு இத்தாலியரான ‘ஆல்ரூஸ் மனூஷியஸ்’ என்பவரே உண்டாக்கிப் பயன்படுத்தினார். இன்று உலகமெங்கும் இது பாவனையில் உண்டு.

என்ற கருதுகோள்களோடு

ஆ) தேவையான ஒலிகளுக்கேற்ப எழுத்துக்களை உண்டாக்கல் பற்றி ஆராய்வோம்.

இன்று எம்மிடத்தில் ஷிசி, நி, சி, பி, கி, மி போன்ற சத்தங்களுக்கு எழுத்துக்கள் இல்லை. இந்த சத்தங்களில் எழுத்துக்களை உண்டாக்க ஆயுதக் குறியீட்¨ப் பாவித்துச் சத்தங்களை உண்டாக்கலாம்.

அதாவது – யி, - ஆயுதக் குறியீடு இவ்வாறுதான் இருந்துள்ளது. இதனை வீரமாமுனிவரே அடுப்புக்கல் போல் ஆக்கி எழுத்தாக்கினார்.

அரபு மொழியில் இந்தக் குறியீடு பயன்பாட்டில் உள்ளது இதனை ஹி சபர், யி சேர், பேஸ் என அழைப்பார்கள்.

அதாவது அலிப் என்ற எழுத்தின் மேல் இந்தக் குறியீட்டை இட்டால் ‘ஆ’ சத்தம் வரும். அலிபுக்கு கீழ் இட்டால் ‘ஈ’ சத்தம் வரம், பேஸ் என்ற அடையாளம் இட்டால் ‘ஊ’ சத்தம் வரும். அரபு மொழியில் உயிர் எழுத்து என்று எதுவுமில்லை.

அரபு மொழியில் ‘மத்து’ என்ற ஒரு குறியீடும் உண்டு. இது அளபடை எனக்கொள்ளலாம். நீட்ட உதவும்.

இஃதேபோல சத்து என்ற குறியீடும் உண்டு. இங்கிலீஸிலும் இந்தக் குறியீடு வழக்கில் உள்ளது. அல்லது அடுப்புக்கல் போல உள்ள (ஃ) எழுத்தைக் குறியீடாகப் பாவித்து சத்தங்களை உண்டாக்கலாம். இவ்வாறு அரபுத் தமிழ் எனும் எழுத்து முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றி கண்டுள்ளார்கள்.

உதாரணமாக இன்று எமக்கு தமிழ் எழுத்துக்களில் சில ஒலிக்குறிய எழுத்துக்கள் இல்லாததுபோல அரபுத் தமிழ் எழுத முனைந்த போது அவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

இதனை நிவர்த்தி செய்ய தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த முஸ்லிம் முன்னோடிகள் சில முறைகளைக் கையாண்டுள்ளனர்.

அதாவது சில தமிழ்ச் சொற்களை அரபியில் எழுதுவதும், அஃதேபோல சில அரபிச் சொற்களை தமிழில் எழுதுவதும் கஷ்டமாக இருந்தபடியால் அரபுத் தமிழ் எழுத்துக்கள் சிலதை அவர்களாகவே உண்டாகிக் கொண்டனர் எனலாம். உதாரணமாக

‘அச்சம்’ என்ற தமிழ் சொல்லை அரபியில் எழுத முடியாது. அரபு எழுத்தில் ‘ச்ச’ என்ற ஒலிக்குரிய எழுத்து இல்லை.

இஃதேபோல ஹராம், அல்லாஹ், மஜித், ஹமீத் போன்ற சொற்களைத் தமிழில் எழுத முடியாது. இதனை நிவர்ததி செய்யவே அரபு எழுத்துக்களில் ‘நுகத்’ எனும் புள்ளியைப் பாவித்து தேவையான ஒலிகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அரபுத் தமிழ் ஒலி சேர்ந்த அரபு எழுத்துக்கள்

இரண்டையும் சற்று அவதானித்துப் பார்த்தால் சில எழுத்துக்களில் புள்ளிகள் சேர்ந்து சத்தம் (ஒலி) மாறுவதை அவதானிக்கலாம்.

நாமும் தொல்காப்பியர் காலத்திலிருந்த ஆயுதக் குறியீட்டை (ஃ) பயன்படுத்தி தமிழ் எழுத்தில் தேவையான ஒலிகளை உண்டாக்கலாம்.

(ஈ) சென்னையில் நடைபெற்ற இன்ரநெட் மாநாட்டில் எழுத்து சம்பந்தமாக பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

1) கீ போட் எழுத்தமைப்பு

2) தமிழ் ஃபொண்டு மேப்பிங் (குறிப்பிட்ட இங்கிலீஸ் எழுத்துப் பொத்தானுக்கான தமிழ் எழுத்து.

3) இணையத்திற்கான தனித் தமிழ் வடிவம்

இது பற்றி மிக நுட்பமாகப் படித்தவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது பொருத்தமுடையதாகும்.

இஃது இவ்வாறிருக்க தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தோடு வேறு ஒரு பிரச்சினையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அதாவது தனித் தமிழ் எழுத்து என்ற ஒரு கோசம். இது எந்தளவு பொருத்தமானது என ஆராய வேண்டியுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.