புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

 
.

விரைவில் அறிமுகமாகவுள்ள Sumsung Galaxy tab

விரைவில் அறிமுகமாகவுள்ள Sumsung Galaxy tab

கைபேசித் தொழில்நுட்பத்தில் முன்னோடியான சம்சுங் இலக்ரோனிக் கம்பனி லிமிடெட், தனது முதலாவது கம்பியில்லாக் கணனிச் சாதனமான Sumsung Galaxy tab களை அறிமுகப்படுத்தவுள்ளது.

மிகவும் நவீன Android TM தொழிற்பாட்டுத் தொகுதி 2.2 உடன் வலுவூட்டப்பட்டுள்ள Sumsung Galaxy tab ஆனது மிகவுயர்ந்த தொடர்பாடல் யதார்த்ததுடனான மொபைலாக ஆக்கப்பட்டுள்ளது. வெறுமனே ஒரு மொபைல் அல்லது பிரத்தியேக கணினி என்ற தன்மைக்கும் அப்பால் முற்றிலும் புதியதொரு வகையாக இணைந்ததொரு தொழில்நுட்ப மட்டத்தை வழங்குகின்றது.

நுகர்வோர் எங்கு சென்றாலும் பிரத்தியேகக் கணினியை போன்ற இணைய உலாவலுக்கு வழிகோலி கச்சிதமான 7 அங்குல முகத்திரை அளவுடன் மல்டிமீடியாவின் அனைத்து வடிவங்களையும் அவர்கள் அனுபவித்து இன்புற முடிகின்றது.

அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போதே Word, Excel மற்றும் Power Point  போன்ற அனைத்து Office  ஆவணங்களையும் உருவாக்கி மற்றும் பதிப்பு செய்து கொள்ள முடிகின்றது. அதனது மிகச் சிறந்த 7 அங்கு TFT-LCD முகத்திரையா னது தோற்றத்தின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் மிகவுயர்ந்த துல்லியத்துடன் வெளிக்கொணரு வதுடன், திரைப்படங்களைப் பார்த்தல், புகைப்படங்களைப் பார்த்தல், மின்முறை வாசித்தல் அல்லது ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றிலே வியக்கவைக்கும் மொபைல் அனுபவத்தைத் தருகின்றது.

இவை எல்லாவற்றையும் விட பாவனையாளர்கள் அதியுச்சமாக்கப்பட்டுள்ள பாவனையாளர் உள்முகத்துடன் மின்னஞ்சல், குரல் மற்றும் வீடியோ அழைப்புக்கள், குறுஞ்செய்திச் சேவை/ மல்டிமீடியா செய்திச் சேவை அல்லது சமூக வலையமைப்புக்கள் மூலமாக தொடர்ச்சியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடிகின்றது.

100,000 இற்கும் அதிகமான Android சந்தைப் பிரயோகங்கள் Galaxy tab இனூடாக அடையப்பட முடிவதுடன், அது நுகர்வோர் தங்களது தேவைகளுக்கேற்றவாறு தமது Galaxy tab இனை வடிவமைத்துக் கொள்ளக்கூடிய மகத்தான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகின்றது.

மிகவும் நவீனமான Adope Flash Player 10.1 இற்கு துணைபுரிகின்ற Sumsung GALAXY Tab இணையத்தின் ஒவ்வொரு பக்கத்தினதும் வேகமான மற்றும் தொடர்ச்சியான பார்வைக்கு முற்றிலுமாக துணைபோகின்றது.

தற்போது பாவனையாளர்கள் தங்களது அலுவலகங்களிலோ, வீடுகளிலோ அல்லது எங்கு பயணித்துக் கொண்டு இருந்தாலுமோ தொடர்பாடலை மேற்கொள்கின்ற புதிய வலிமையை இதன் மூலமாகப் பெற்றுக் கொள்கின்றனர்.

அதனது மெலிதான எடையை உருவாக்கும் காரணியானது நேர்த்தியாக இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய அம்சத்தினை வழங்குவதுடன், அதனது ஒல்லியான விளிம்புகள் பற்றிக் கொள்வதற்கும், உபயோகிப்பதற்கும் இலகுவாக அமைந்துள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.