புத் 63 இல. 53

விகிர்தி வருடம் மார்கழி மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 26

SUNDAY JANUARY 02,  2011

இனப்பிரச்சினை தீர்வில் புதிய அரசியல் திருப்பம்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அடுத்த வாரம் நேரடிப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக் கின்றன.அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்து வதற்காக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படும் அமைச்சர்கள் குழுவுடன் இரா. சம்பந்தன் எம்.பி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக ஏற்கனவே இருதரப்பும் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதுடன் அரசியல் தீர்வு தொடர்பான நேரடிப் பேச்சுவார்த்தையை அடுத்த வாரமே ஆரம்பிக்கின்றன.

விவரம் »

கந்தப்பளை பாக் தோட்டத்தில் 23 லயன் அறைகள் எரிந்து நாசம்

கந்தப்பளை பாக். தோட்டம் டெனிஸ் கிளப் லயன் அறைகள், 23 முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. ஒருவர் தீக் காயத்திற்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் புதுவருடம் பிறந்து அரை மணி நேரத்தினுள் நடந்துள்ளது.

விவரம் »
 

காலைவாரியது ஐ.தே.க் சிறுபான்மை கட்சிகள் திண்டாட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை நம்பி ஆதரவு வழங்கி வரும் சிறுபான்மைக் கட்சிகள் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணிக் கட்சியாக உடன்படிக்கை செய்து கொண்டு இனிமேல் அந்தக் கட்சிகள் போட்டியிட அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளதால் ஐ.தே.க. சார்பு சிறுபான்மைக் கட்சிகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், நீண்டகாலமாக அந்தக் கட்சியை நம்பிய தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் துரோகம் இழைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிடுவதாக இருந்தால் கூட்டணியாக அன்றி ஐ.தே.க உறுப்பினராக அங்கத்துவம் பெற்றே போட்டியிட

விவரம் »

சொந்த மண்ணிற்குத் திரும்பும் வடபுல முஸ்லிம் மக்கள்

வடபுலத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் இப்போது தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல முஸ்லிம் மக்கள் அவ்வாறு சென்று மீளக் குடியேறி வருகின்றனர். அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதற்கான ஏற்பாடுகளை மிகுந்த கவனமாகவும், துரிதமாகவும் மேற்கொண்டு வருகின்றார். புலிகள் கொடிகட்டிப் பறந்த ஒரு காலகட்டத்தில் காரணம் எதுவுமின்றிக் கண்மூடித் தனமாக இந்த அப்பாவி முஸ்லிம் பொதுமக்களை உடுத்த உடுப்புடன் இடம்பெயர வைத்து இன்பம் கண்டனர். அப்போது சாதாரண தமிழ் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்து மனவேதனைப்பட்டாலும் வாய்விட்டுக் கேட்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.

விவரம் »

 

Advertisements______________________

Navayugaya

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

   TRC

www.defence.lk    


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.