புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
அரிசி இறக்குமதியில் 400 மில்லியன் மோசடி;

அரிசி இறக்குமதியில் 400 மில்லியன் மோசடி;

அரசியற் பிரமுகர் கைதாகலாம்? 

 கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. கொழும்பில் உள்ள கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் ஊடாக கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த அரிசி  சுமார் 300 கொள்கலன்களில் எங்குக் கொண்டு செல்லப்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை என அரச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்படி இந்தப் பாரிய மோசடியில் மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி தொடர்புபட்டுள்ளமை விரைவில் அம்பலத்துக்கு வரும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோடிஸ்வர வர்த்தகருடன் இணைந்து இந்த அரிசியை கொள்வனவு செய்வதற்கு இந்திய நிறுவனத்துடன் மேற்படி அரசியல்வாதி செயற்பட்டார் என சொல்லப்படுகிறது. 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.