புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 

PickMe தற்போது தமிழ், சிங்கள மொழிகளில்

PickMe தற்போது தமிழ், சிங்கள மொழிகளில்

PickMe கடந்த ஜுன் மாதம் தனது புதிய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது. மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு இலகுபடுத்தும் வகையில் PickMe தனது Application களை இரு மொழிகளில் உருவாக்கியுள்ளது.

புதிய அங்கமான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான Appilcaition PickMe இன் புதியவ ருடத்தின் நாடளாவிய சேவையில் முக்கிய அங்கமாக விளங்கும் PickMe யின் சேவைகள் அதன் வெளிநாட்டு போட்டியாளர்களை விட வித்தியாசமான அனைத்துதர மக்களுக்கும் வழங்குகிறது. உயர்தர மட்டத்தவருக்கான கார்கள் மற்றும் ஏனைய தர மக்கள் பயன்படுத்தக் கூடிய மினி மற்றும் ஆட்டோக்களாலும் (Tuk) வழங்கப்படுகிறது.

PickMe இன் நவீன தொழில்நுட்பமானது இலங்கையின் பொருளாதாரத்தில் மிகமுக்கிய பங்கை வகிக்கிறது. இதன் வணிகத் தீர்வின் மூலமாக தொழில் முனைவர் (entrepreneur)ஆகியோருக்கு சந்தையை இலகுவாக அடைந்து கொள்ள முடியும். இது மிகவும் வலுவான தொடர்பை Taxi சேவையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உருவாக்குகிறது. PickMeTaxi இன் சாரதிகள் வாடிக்கையாளர்களைத் தேடி வீதியில் அலைய வேண்டியதில்லை. இதன் GPS தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களையும் Taxi சாரதிகளையும் ஸ்மார்ட் போனின் ஊடாக இலகுவில் தொடர்புபடுத்தி விடுகிறது. நிறுவனம் நடத்திய வியாபார ஆய்வின்படி Pick Me தொழில்நுட்பத்தின் மூலமாக எரிபொருள் விரையத்தை 50 சதவீதத்தினால் குறைத்துக் கொள்ள முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது எரிபொருளால் சூழல் மாசடைவதை குறைப்பதோடு சாரதிகளுக்கு பொருளாதார வலுவூட்டலாகவும் அமைகின்றது.

இது தொடர்பில்,கடந்த 4 மாதங்களாக PickMe இயக்க தொழில்நுட்பமுறையின் கீழ் வாகனம் செலுத்திவரும் சாரதி ஒருவர் கூறுகையில், “நான் இதற்கு முன்னர் Nano Cab மூலம் Cab சேவையை ஆரம்பித்தேன். அதன்போது எனக்கு என்னுடைய வாகனத்திற்கு Lease தொகையைக் கட்டக் கூட காசை தேடுவது கஷ்டமாக இருந்தது. அதனால் இதை எப்படியாவது சரி செய்வதற்கு நான் தனியாக செயற்பட்டு இயங்கத் தொடங்கினேன். அது எனக்கு மிகுந்த அழுத்தத்தையும், கடினமாகவும் இருந்தது.

எனக்கு இந்த ஒருவாகனத்தை வைத்துக் கொண்டு நிலைமையை சமாளிப்பதற்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. நான் என்னுடைய வியாபாரத்தை காப்பாற்றுவதற்காக ஒருவாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கும் போது இந்த PickMe யைநான் கண்டுபிடித்தேன். குறைந்த மாதங்களுக்குள் எனக்கு நல்ல பலன் கிடைத்தது. இப்பொழுது நான் ஒரு புதிய வாகனத்தை வாங்கியதோடு என்னுடைய பழைய வாகனத்திற்கு ஒரு வாகன சாரதியை அமர்த்தி அதற்கும் PickMe முறையையே பயன்படுத்துகிறேன். PickMe மூலம் எனக்குசிறந்த இலாபத்தைஅடையமுடியும் என்றுநான் நினைக்கிறேன்.”

அண்மையில் PickMe யில் நடந்த மேம்பாடுகள் Business Portal - இது வியாபார நிறுவனங்களில் சேவை புரிபவர்களுக்கு இலகுவாக வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும் பொறிமுறையாகும். இதன் மூலம் கம்பனிகள் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் பயணங்களைக் கண்காணிப்பதற்கும் உதவுகிறது. ETA Sharing–பயணப் பகிர்வு மூலமாக தனது பயணத்தை இன்னொருவர் கண்காணிப்பதற்கு உதவுகிறது. இது தனது நெருக்கமானவர்களை பாதுகாப்பான முறையில் பயணிக்க வைக்கவும் உதவுகிறது.

தமிழ் மற்றும் சிங்கள மொழி இடைமுகங்கள் சரியாக இரு விரிவான விஸ்தரிப்பை நிறுவனம் மேம்படுத்தியுள்ளதோடு அதனை விசாலமாக்கி அவர்களது மொழியை அடிப்படையாகக் கொண்டு தற்போது பல்வேறு இடைமுகங்களை மேற்கொண்டு வருகின்றது. 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.