புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
பலதும் பத்தும்...

பிரித்தானிய குட்டி இளவரசர் பள்ளிக்கு செல்ல தயார்

பிரித்தானிய குட்டி இளவரசரான ஜோர்ஜ் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மழலையர் பள்ளிக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமான அரண்மனை தகவல்கள் வெளியாகியுள்ளது.

குட்டி இளவரசி சார்லெட் தனது முதலாவது கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட உள்ள தருணத்தில், இளவரசர் வில்லியம், அவருடைய மனைவி கேட் மிடில்டன், ஜோர்ஜ் மற்றும் சார்லெட்டின் குடும்ப புகைப்படத்தை அரண்மனை வெளியிட்டது.

இந்த புகைப்படம் வெளியானதன் தொடர்ச்சியாக இன்று அரண்மனை புதிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், ‘எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் ஜோர்ஜ் மழலையர் பள்ளிக்கு அனுப்பப்படுவார் என்றும், வாரத்தில் சில நாட்கள் மட்டும் பள்ளியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டரை வயதை எட்டியுள்ள ஜோர்ஜ், இளவரசி கேட் மிடில்டன் Norfolk மாளிகைக்கு அருகே உள்ள Westacre Montessori School என்ற பள்ளிக்கு அனுப்பப்படுவார். இந்த பள்ளிக்கு செல்லும் வழியானது ஒரு பொதுச்சாலை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட இளவரசர் வில்லியம், ‘ஒரு தந்தை என்ற அடிப்படையில் ஜோர்ஜின் கல்வி மீது மிகுந்த அக்கறை உள்ளது.

அதே சமயம், பள்ளிக்கு முதன் முதலாக செல்லும் ஜோர்ஜின் தனி அந்தரங்கத்திற்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குட்டி இளவரசர் பள்ளிக்கு வருகிறார் என்ற செய்தி அறிந்ததும் பள்ளி நிர்வாகமும் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், ‘குட்டி இளவரசரை வரவேற்க தயாராக இருக்கிறோம். பிற குழந்தைகளுக்கு தனி அக்கறையுடன் கல்வி கற்பிப்பதை போல் இளவரசர் மீதும் தனி அக்கறை செலுத்துவோம்’ என தெரிவித்துள்ளனர். 

 


 

அன்னை தெரசாவுக்கு “புனிதர் பட்டம்”

 ஏழை, எளிய மக்களுக்காக மகத்தான சேவை புரிந்த அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

கடந்த 1910ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி ஏழைக் குடும்பத்தில் அல்பேனியா நாட்டில் பிறந்தவர் அன்னை தெரசா.

கடந்த 1929ம் ஆண்டு இந்தியா வந்தவர் சமூக சேவையில் ஈடுபட்டார், வாழ்நாள் முழுவதும் தொழு நோயாளிகளையும், ஏழை, எளிய மக்களையும் அன்போடு அரவ​​ ணை​த்தார்.

இந்நிலையில் இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.இதற்கு முன் இவர் அருளாளர் என்ற பட்டத்தையும், இரண்டு அற்புதங்களையும் நிகழ்த்தி இருக்க வேண்டும்.

மேற்குவங்கத்தை சேர்ந்த புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட மோனிசா என்ற பெண்ணும், பிரேசில் நாட்டை சேர்ந்த கோமா நிலையில் இருந்த நபரும் அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்து வந்ததால் குணமானது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இந்த இரண்டு அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து அன்னைக்கு புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பட்டம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


 

மூக்குக்கு மேல் மூளை வளரும் ஒன்றரை வயது ஆண் குழந்தை!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள மாஸ்டெக் நகரில் வசிக்கும் ஆமி பூலே என்ற பெண்ணுக்கு கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாவது பிரசவத்தில் பிறந்த ஆண்டு குழந்தைக்கு மூக்கின் நுனிப்பகுதியில் பெரிய எலுமிச்சைப்பழ அளவில் இருந்த கட்டி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

அரிதிலும் அரிதாக மண்டையோட்டின் துவாரம் வழியாக மூக்குக்குள் மூளை வளரும் என்செபாலோசெல் (encephalocele) எனப்படும் பிறவிக் குறைப்பாட்டால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

அடுத்தடுத்து பல சத்திரசிகிச்சை மூலம் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு தனது மகன் திரும்பினாலும் அண்டை வீட்டாரின் கேலியும், பரிகாசமும் ஆமி பூலேவின் தாயன்பை அசைத்தும் பார்க்க முடியவில்லை. மற்ற குழந்தைகளில் இருந்து மாற்றமான தோற்றத்தில் காட்சியளிப்பதில் எங்களுக்கு எந்த மனக்குறையும் இல்லை. என்னதான் இருந்தாலும் அவன் எங்களுக்கு மிகவும் சிறப்பான தேவதூதன் போன்றவன். அவன்மீது நாங்கள் செலுத்தும் அன்பும், காட்டும் அக்கறையும் ஒருநாளும் குறையாது என்கிறார். 

 


 

கூகுளின் ‘குவாண்டம்’ தொழில்நுட்பம்: வருகிறது மின்னல் வேக கணனி

 கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணனிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, இவை சாதா ரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொ ண்டவை. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணனி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணனிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 


 

காதலியுடன் கிறிஸ்மஸ் கொண்டாட

12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்த காதலன்

பிரித்தானியாவில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்துள்ளார் காதலன் ஒருவர்.

பிரித்தானியாவின் Horwich பகுதியில் குடியிருக்கும் Jimmy Hailwood என்பவர் அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார்.

பிரித்தானியாவில் இருக்கும் தமது காதலியுடன் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாடும் பொருட்டும், பண்டிகையை முன்னிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டும் Hailwood மிதிவண்டி பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து துவங்கும் இந்த மிதிவண்டி பயணத்தின் இடையே தொண்டு நிறுவனங்களுக்கான நிதியையும் சேகரிக்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து விமானம் மூலம் பாலியின் Denpasar பகுதிக்கு வந்த அவர், அங்கிருந்து இந்தியா வரை மிதிவண்டியில் கடந்துள்ளார்.

இந்தியா தலைநகர் டெல்லியில் இருந்து மீண்டும் Bishkek பகுதிக்கு விமானத்தில் புறப்பட்ட Hailwood, அங்கிருந்து மிதிவண்டியில் பிரித்தானியாவின் Horwich வந்து சேர்ந்துள்ளார்.

இந்த பயணத்தின் இடையே 17,000 பவுண்டுகள் நிதி சேகரித்த அவர் அதனை Lancashire பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.

Hailwood கிறிஸ்மஸ் பண்டிகையின்போது உடன் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று என தெரிவித்துள்ள அவரது காதலி Ashton,

குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு 12,000 மைல்கள் மிதிவண்டியில் பயணம் செய்துள்ளது கடினமான முயற்சி என்றபோதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 


 

உள்ளாடைகளை மாத்திரம் அணிந்த யுவதிகள்

பங்குபற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்த யுவதிகள் பங்குபற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்துள்ளார். மன்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்பவரே இப்போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளார். மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு ரசிகர்களையும் அனுசரணையாளர்களையும் ஈர்ப்பதற்காக இப் போட்டிகளை தான் ஏற்பாடு செய்ததாக ஜெம்மா ஹியூஸ் கூறுகிறார்.

சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத் தின் (ஃபீஃபா) தலைவர் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட செப் பிளாட்டர், மகளிர் கால்பந்தாட்டத்துக்கு ரசிகர்களை ஈர்ப்பதற்காக போட்டியாளர்கள் இறுக்கமான சீருடைகளை அணிய வேண்டும் என சில வருடங்களுக்கு முன்னர் கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், ஜெம்மா ஹியூஸ் அவரின் எண்ணத்தை செயற்படுத்துகிறார். “நான் 23 வயதானவள். மகளிர் கால் பந்தாட்டப் போட்டிகளுக்கு அனுசரணைகள் கிடைப்பதற்கு இன்னும் 20 வருடங்கள் என்னால் காத்துக் கொண்டிருக்க முடியாது என ஜெம்மா கூறுகிறார். 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.