புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
தினகரன்/வாரமஞ்சரி வாசகர் வட்ட அங்குரார்ப்பணம் - ஊவா ஊடகவியலாளர் சங்க பத்தாண்டு பூர்த்திவிழா!

தினகரன்/வாரமஞ்சரி வாசகர் வட்ட அங்குரார்ப்பணம் -

ஊவா ஊடகவியலாளர் சங்க பத்தாண்டு பூர்த்திவிழா!

தினகரன்/வாரமஞ்சரியின் பன்னிரண்டாவது வாசகர் வட்டம் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவோடு இணைந்ததாக ஊவா மாகாண ஊடகவியலாளர் சங்கத்தினரின் பத்தாண்டு பூர்த்திவிழாவும் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கவிஞர் பசறையூர் க.வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவங்களுக்கு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, மாகாண அமைச்சர் எம்.செந்தில் தொண்டமான் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர். கௌரவ அதிதியாக முன்னாள் அமைச்சரும் கோபியோ இலங்கைக் கிளையின் தலைவருமான பி.பி.தேவராஜ் கலந்துகொண்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான ரி.வி.சென்னன், மாகாண சபை உறுப்பினர்கள் வேலாயுதம் உருத்திரதீபன், ஆறுமுகம் கணேசமூர்த்தி, ஆறுமுகம் சிவலிங்கம், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், செய்தியாசிரியர் விசு கருணாநிதி ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் உதவி ஆசிரியர்கள் பி.வீரசிங்கம், போல் வில்சன் மற்றும் ஆசிரியபீட உறுப்பின ர்கள் ஆர்.சுபாகரன், எஸ்.சுதாதரன், செய்தியாளர் அ.பொன்னம்பலம் முதலானோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதத்தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், சிரேஷ்ட எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்துறை சார்ந்தவர்களும் இந்த விழாவில் பாராட்டிக்ெகளரவிக்கப்பட்டார்கள். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் விழாவை மெருகூட்டின. காலியைச் சேர்ந்த எழுத்தாளர்

நாக்கியாதெனி விஜேசேகர தமிழிலும் சிங்களத்திலும் எழுதிய 'விஜே சிஹினய' எனும் கவிதை நூல் அறிமுகம்செய்துவைக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர்கள் அசோக், கோகுலன் ஆகியோர் திறம்படத் தொகுத்து வழங்கினர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.