புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
சங்காவின் ஓய்வின் பின்னரான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி

சங்காவின் ஓய்வின் பின்னரான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி

விளையாட்டு உலகம் தற்போது நடைபெறும் ரக்பி உலகக் கிண்ணத் தொடர் குதூகலத் தில் இருக்கும் வேளையில் ஆசியப் பிராந்திய கிரிக்கெட் இரசிகர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் வாரத்திலிருந்து கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகிறது. டெஸ்ட் விளையாடும் அனைத்து ஆசிய நாடுகளும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவிருக்கின்றன.

அவ்வனைத்துப் போட்டிகளும் ஆசிய பிராந்தியத்திலேயே நடைபெறவிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் அக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் டெஸ்ட் தொடர் இலங்கையிலும், இந்திய - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் இந்தியாவிலும், பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடை யிலான தொடர் பங்காளாதேஷிலும், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக் கிடையிலாள தொடர் ஐக்கிய அரபு இராச் சியத்திலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

இலங்கை - மேற்கிந்தியத் தீவு

இரண்டு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 2 டுவெண்டி / 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மேற் கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வருகின்றது. மே. இ. அணி நீண்ட கால இடைவெளிக்குப் பின் டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கின்றது. அவ்வணி பல புதுமுக வீரர்களுடன் புதிய தலை வரான ஜேஸன் ஹோல்டர் தலைமையில் விளையாடவுள்ளது. அநேகமான மேற் கிந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்க ளுக்கே அதிகம் முக்கியத்துவம் அளிக்கும் அணியாகும். ஆனால் இலங்கை மைதானங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. எனவே அவ்வணியில் மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை யில் அவ்வணிக்கு இது முக்கியமா னது தொடராகும். சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்காரவின் ஓய்வின் பின் அவ்வணி சந்திக்கும் முதலாவது டெஸ்ட் தொடர் இதுவாகும். இலங்கை அணி அண்மையில் சொந்த மண்ணில் நடை பெற்ற இரு டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியடைந்துள்ளன. 20 வருடங்களின் பின் பாகிஸ்தான் அணியிடமும், 22 வரு டங்களின் பின் இந்தியா அணியிடமும் 2 - 1 என்ற ரீதியில் தோல்வியடைந்துள் ளன. இத் தோல்வி காரணமாக இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக இருந்த மாவன் அத்தபத்து அப்பதவி யிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

இலங்கை அணிக்கு புதிய பிரதான பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன, புதிய வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நுவன் சொய்சா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் அண்மைய தோல்விக் முக்கிய காரணம் இலங்கை அணியின் களத் தடுப்பே என்று புதிய பயிற்சியாளர் சாடியுள்ளார். ஆசியப் பிராந்தியத்தில் உள்ள டெஸ்ட் விளையாடும் அணிகளின் களத்தடுப்பில் இலங்கை அணியின் களத்தடுப்பே மிக மோசமாகவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின் அநேகமாக இலங்கை அணியின் தொடர் வெற்றிகளுக்கு சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தே முக்கிய பங்காற்றியிருந்தார். ஆனால் தோல்வியுற்ற அண்மைய இரு தொடர்களிலும் அவர் சிறப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை. அண்மைய தொடர்களில் கெளசல் சில்வா, தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், குசல் பெரேரா ஆகியோர் துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் வேகப் பந்து பீச்சாளர் தம்மிக பிரசாத் அண்மையில் நடைபெற்ற இரு தொடரிலும் திறமையாகப் பந்து வீசி எதிரணியினருக்கு நெருக்கடி கொடுத்திருந்தார். இவருக்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமிர துஷ்மந்தும் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். சுழற் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் கட்டாயமாக இத் தொடரில் திறமையாகப் பந்து வீசவேண்டும். ஏனெனில் மற்றைய சுழல் பந்து வீச்சாளர் கெளஷல் சில்வா பந்து வீச்சில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். எனவே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இவர்கள் அனைவரும் திறமையாக விளையாடி முன்னைய தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

தென்னாபிரிக்கா - இந்தியா

அக்டோபர் மாதம் மிக நீண்ட கால சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இந்தியா வரும் தென்னாபிரிக்கா அணி 4 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டுவெண்டி - 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

சர்வதேச டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திலுள்ள தென்னாபிரிக்கா அணி தரவரிசையில் பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் முதனிலை பெற்ற பல வீரர்கள் அவ்வணியில் விளையா டுகின்றனர். துடுப்பாட்டத்தில் ஹசீம் அம்லா, டிவிலியர்ஸ், டு பிளெஸ்லி, டுமினி, டெஸ்ட், ஒருநாள், டுவெண்டி / 20 என எந்தப் போட்டியானலும் அதற்கேற்றவாறு துடுப்பெடுத்தாடும் திறமை கொண்டவர்கள். பந்து வீச்சைப் பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், மொனி மோர்க்கல், பிளேன்டர் ஆகியோரின் வேகப்பந்து வீச் சும், அண்மையில் சுழல்பந்து வீச்சில் திறமைகாட்டி வரும் இம்ரான் தாஹிரின் சுழற்பந்து வீச்சும் இந்திய அணிக்கு கடினமாக அமையும்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் அண்மையில் இலங்கை அணியை 22 வருடங்களின் பின் தோற்கடித்த உற்சாகத்தில் உள்ளது. மேலும் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிநாட்டு மண்ணில் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியாகவும் இது பதிவாகியுள்ளது.

இந்திய அணி துடுப்பாட்டம், பந்து வீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் சம பலத்துடன் உள்ள அணியாகும். முக்கியமாக அவ்வணியின் சுழற் பந்து வீச்சு தென்னாபிரிக்க அணியைவிட பலம் வாய்ந்ததாகவே காணப்படுகிறது. அவ்வணியணின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், மிஸ்ரா இருவரும் திறமையாகப் பந்து வீசி எதிரணியை திக்குமுக்காட வைக்கின்றனர். வேகப் பந்துவீச்சிலும் இஷாந்த், உமேஷ், புவனேஷ் திறமையானவர்கள். அவ்வணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் தலைவர் கோஹ்லி, புஜாரா, ரெஹானே, ரோஹித், தவான் போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இடம்பெறுவதால் தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்கள் கடும் சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடும். இவ்விரு அணிகளும் சம பலத்துடன் மோதவிருப்பதால் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தான் - இங்கிலாந்து

அஷஸ் தொடர் வெற்றியுடன் மிகுந்த உற்சாகத்தில் உள்ள இங்கிலாந்து அணி பாகிஸ்தானுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத் துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றது.

அவுஸ்திரேலியாவுடனான சவால் மிகுந்த ஆஷஸ் தொடரை 3 - 2 என்ற ரீதியில் வெற்றிகொண்ட இங்கிலாந்து அணி சில மாற்றங்களுடன் புதிய துடுப் பாட்டப் பயிற்சியாளரான இலங்கை அணியிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற மஹேல ஜெயவர்த்தனவின் வழிகாட்டலில் பாகிஸ்தானைச் சந்திக்க விருக்கின்றது.

வழமையான பல சிக்கல்களுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் அணி தற்போது திறமையாக விளையாடி வருகின்றது. அண்மையில் இலங்கையுடனான வெற்றி அவ்வணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. அவ்வணியின் பல வெற்றிகளுக்கு கைகொடுத்த அவ்வணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹித் அஜ்மலின் பந்து வீச்சுக்குத் தடை வந்த பிறகு அவ்வணியின் சுழந் பந்து வீச்சு பலவீனப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் புதுக் கண்டு பிடிப்பான யkர் ஷா எதிர் அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பந்து வீச்சாளராக மாறியுள்ளார். அண்மையில் இலங்கை அணியுடனான தொடர் வெற்றிக்கு அவரின் பந்து வீச்சே காரண மாக அமைந்தது. அவருடன் சுல்பிகார் பாபரும் சுழலில் அவ்வப்போது கலக்கி வருகிறார். அவர்களின் வேகப்பந்து வீச்சும் இங்கிலாந்து அணி வேகப் பந்து வீச்சுடன் ஒப்பிடும் போது சற்றுப் பின்னடைவான நிலையில் இருந்தாலும் எவ்வணியையும் சமாளிக்கக் கூடிய வகையில் அவர்களின் வேகப்பந்து வீச்சு அமைந்துள்ளது. துடுப்பாட்டத்தில் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான தலைவர் மிஸ்பா உல் ஹக், யூனூஸ்கான் எப்போதுமே அவ்வணிக்குக் கைகொடுப் பவர்கள். இத் தொடரிலும் அவர்களை எதிர்பார்க்கலாம். அத்துடன் மொஹமட் ஹபீஸ், சபீக், அஸாரி அலி என அவர்களின் துடுப்பாட்ட வரிசை பலமாகவே உள்ளது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் துடுப்பாட்டத்தில் தலைவர் அலிஸ்டேயர் குக், இயன் பெல், ஜோன் ரூட், இயன் மோர்கன், அலி, கிறிஸ் புரோட் என அவர்களின் துடுப் பாட்ட வரிசையும் பலமாகவே உள்ளது. சுழற் பந்து வீச்சில் மொயின் அலி, ரiத் சுழற்பந்து வீச்சுக்கு சாதனமான இவ்வாடுகளங்களில் திறமையாகப் பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கலாம். இரு அணிகளையும் அவதானிக்கும் போது சமபல அணியாகவே உள்ளது. எனினும் சுழற்பந்து வீச்சில் பாகிஸ்தான் கையே சற்று ஓங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் அவர்களின் திறமையை நிச்சயித்துக் கூற முடியாத அணியாகும். கடைசியாக நடைபெற்ற தொடரில் இங்கிலாந்து அணி 3 - 0 என்ற கணக்கில் அதே மைதானங்களில் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ கிரிக்கெட் இரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக இப்போட்டித் தொடர் அமையப் போகின்றது.

அவுஸ்திரேலியா - பங்களாதேஷ்

அஷஸ் தொடர் தோல்விக்குப் பின் அவுஸ்திரேலிய அணி சந்திக்கப் போகும் தொடர் அடுத்த மாதம் நடைபெறும் பங்களாதேஷ் அணியுடனான தொடராகும். அவ்வணியின் சிரேஷ்ட வீரர்களான ரோஜர்ஸ், வொட்ஷன், மைக்கல் கிளார்க், பிராட் ஹெட்டினின் ஆகியோ ரின் ஓய்வுக்குப் பின் சந்திக்கும் முதல் தொடராகும். மேலும் அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோனரும் காயம் காரணமாக இத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

என்றாலும் அவ்வணியின் துடுப்பாட்டப் பலம் தற்போது புதிய தலைவர் ஸ்மிதை நம்பியே அவ்வணி உள்ளது. அவ்வணி யின் வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்ராக், ஜோன்ஸன் எனப் பலமாகவே உள்ளது. என்றாலும் மந்தமான ஆடுகளங்களில் எவர்களின் பந்து வீச்சு எடுபடுமா என்பது கேள்விக்குறியே.

பங்களாதேஷ் அணியைப் பொறுத்த வரை உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்குப் பின் அவ்வணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் அனைத்திலும் திறமைகாட்டி வருகின்றது. அவ்வணியின் புதிய பந்து வீச்சாளர் முஸ்டாபிகுர் ரஹீம் அண்மையில் இந்தியாவுடனான தொடரில் திறமையாகப் பந்து வீசியிருந்தார். அவர் அண்மையில் முடிவுற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கலக்கலாகப் பந்து வீசியுள்ளார். துடுப்பாட்டத்திலும் முஸ்பிகுர் ரஹீம், மொஹம்மதுல்லா. சகிப் அல் ஹஸன் போன்ற துடுப்பாட்ட வீரர்களும் நல்ல நிலையில் இருப்பதால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற கடுமையாகச் செயற்பட வேண்டியேற் படும். தன் சொந்த மண்ணில் விளையாடுவதால் பங்களாதேஷ் அணிக்குக் கூடுதல் அணுகூலமாக இத் தொடர் அமையலாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.