புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 

உங்கள் உதடுகள் அழகாக வேண்டுமா?

உங்கள் உதடுகள் அழகாக வேண்டுமா?

அத்திப்பழ கன்னம் மட்டும் இருந்தால் போதாது, கோவைப்பழ உதடுகளும் இருந்தால் தானே அழகு.

எப்படி உங்கள் உதடுகளை பராமரிப்பது?

வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் தினசரி உதடுகளின்மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும்.

கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பு+ன் ஜhதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.

பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பு+சி வந்தால் உதடுகள் அழகாகும்.

ஆம்! இன்னும் சில நாட்களில் உங்கள் உதடும் இயற்கையாகவே சிவப்பாக ஆகிவிடும் பாருங்களேன்!

இதேபோன்று முகத்தில் எண்ணெய் வடிவ தையும் தடுக்க சிறந்த டிப்ஸ்கள் உள்ளன.

ஒரு டிஷ்யு+ பேப்பரை வைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சுற்றி அழுத்தித் தேய்க்க வேண்டும்.

ஆலிவ் எண்ணெயைக் குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவ வேண்டும்.

ஆப்பிள் பழத்தை மைய குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மசாஜ் செய்தபின் கழுவ வேண்டும்.

இதே போல் வெந்தயத்தை மைய அரைத்தும் மசாஜ் செய்யலாம்.

பாலேட்டுடன் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறை குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவ வேண்டும்.

எலுமிச்சைப்பழத்தை பாதியாக வெட்டி அதன் சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவ வேண்டும்.

ஒரு ஸ்பு+ன் வேக வைத்த ஓட்ஸ் கஞ்சி, ஒரு ஸ்பு+ன் பால், ஒரு துளி எலுமிச்சைப் பழச்சாறு மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவி வர, எண் ணெய் வழிதல் மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கூட மறைந்துவிடும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.