புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
சிறுவர், முதியோர் தினம் 01.10.2015

சிறுவர், முதியோர் தினம் 01.10.2015

முதியோர்களின் மகிமை பேணுவோம்

எமது சமூகம் கூட்டுக்குடும்பம் என்ற ரீதியில் விளங்கினாலும், நாளடைவில் தொழில் ரீதியாக இடம் பெயர்வு, என்ற ரீதியில் தமது பெற்றோர், குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர்கள் தனிமையில் வாழும் சூழ்நிலை உரு வாகியுள்ளது. அத்துடன் பெற்றோர் பிள்ளை உறவு முறிவடைந்தும், குடும்ப பிணக்குகளை பெற்றோர், முதியவர்கள் கைவிடப்படும் சூழ்நிலையும் காணப் படுகிறது.

எமது நாட்டிலும் முதியோர் இல்லங்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது. முதி யவர்களின் தாபரிப்பு நிலையமாகவும் அடைக்கலம் புகும் நிலையமாகவும் முதியோர் இல்லங்கள் காணப்படுகின்றன. முதியோர் இல்லங்களில் வசிப்பவர் களை அவர்களின் இரத்த உறவுகளோ பார்ப்பதும் விசாரிப்பதும் அருகி கொண்டே வருவது. ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களையே சிரேஷ்ட பிரஜைகள் என்ற சமூக அந்தஸ்து இருந்தாலும் இவர்களை குறித்ததான விசாரிப்பு, கரிசனை மிக குறைவாகவே காணப்படுகின்றது. அநேக இடங்களில் முதியவர்கள் கறிவேப்பிலை போலவே காணப்படுகின்றனர்.

முதுமை என்பது நபரின் பிறப் பிலிருந்து ஆரம்பமாகிறது. ஒரு குழந்தை வளர்ந்து பெரிதாகும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக் கிறது. ‘ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்’ என்பது போல பிறப்பும் முதுமையும் பிறப்பின் பரிமாணமாகும்.

அக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறு வர்கள் தினத்தோடு முதியோர் தினமும் அனுஷ்டிக்கப்படுகிறது. சிரேஷ்ட பிரஜைகளாகிய இவர்களை சமூகத்தினர் கண்ணியமாகவும், கெளரவமாகவும் நோக்கி, அவர்களை மதிக்க வேண்டிய தன் அவசியத்தை உணர்த்துமுகமாக ஐக்கிய நாடுகள் பொதுசபையானது அக்டோபர் 1ம் திகதியை சர்வதேச முதி யோர் தினமாக பிரகடனப்படுத்தியது.

இத்தினம் 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு, 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் இத்தினம் வருடாவருடம் கொண்டாடப் படுகிறது.

முதியோர் தினம் என்றால் வாழ்த்து மடல், அல்லது பரிசு பொருட்களை கொடுத்தால் போதுமானது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் உலகெங்கிலும் வாழும் முதியோர் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து, அவர்களுக்கென ஒரு சமூக கட் மைப்பை உருவாக்குவதும், முதியவர் குறித்தான ஒரு விழிப்புணர்வையும் உருவாக்குவதே இதன் பிரதான இலக்காகும்.

ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 75 வயதாகும். அதற்கு மேல் அவர்க ளின் உடல் ஆரோக்கியமே அவர் களை வாழ வைக்கிறது. முதியவர்களின் மகிமை அவர்களின் நரை மயிராகும்.

முதியவர்களின் சரீரம் தளரும் போது, தோல் சுருங்கமும் வியாதிகளும் தொற் றிக் கொள்கின்றன. அநேகர் சிறுபிள்ளை தன்மையுடையவர்களாகவும் மாறுகின்ற னர். சிலர் தங்களது தனிமையை நினைத்து மனந்தளர்வு அடைகின்றனர். சிலர் முதிர்வயதிலும் உழைத்து உழைப் பாளியாக இருக்கவே விரும்புகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

எமது நாட்டை பொறுத்த வரை சமூக சேவை நிறுவனங்களினால் முதி யோர் பராமரிப்பு, முதியோர் கொடுப்பனவு பங்களிப்புகள் இருந்தாலும் அவை போதுமானவையாக இல்லை. அத்துடன் முதிர்ந்த பெற்றோர் தமது பிள்ளைக ளின் நிழலிலே வாழவே விரும்புகின் றனர். இந்நிலையை குறித்து சிந்திப்பது மிகமிகக் குறைவானதயாகும்.

இத்தினத்தையொட்டி முதியோரின் சுதந்திரம், பாதுகாப்பு, சுகாதாரம், தேவைகள் குறித்து அவதானம் செலுத் தப்படல் வேண்டும். அத்துடன், அவர் களுக்கு மதிப்பளித்து, கெளரவித்து, ஊக்குவித்து, அவர்களின் உரிமைகளை விருப்பங்களை அறிந்து அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுத் தப்பட வேண்டும். அவர்கள் நற்கருத்து களுக்கு மதிப்பளித்து அவர்களின் உள்ளத்தை மகிழ்வித்தல் வரவேற்கத் தக்க செயற்பாடாகும்.

நாம் மேலை நாடுகளை சுட்டிக்காட் டிக் கொண்டு எமது பாரம்பரியங்களை யும், சமூக விழுமியங்களையும், குடும்ப சூழலையும் மறந்து விடுகிறோம். ‘நாம் முதியோர்களாகும் வரை பெற்றோரின் அருமை தெரியாது’ என்பர்.

நாம் எமது பெற்றோரையும் குடும்பத்திலுள்ள முதியவர்களையும் எப்படி கவனிக்கி றோம் என்பதை எமது பிள்ளைகளின் சிறிய கண்கள் அவதானிக்கும் என்பதை மறந்திடலா காது. நாம் அளக்கும் அளவின்படியே எமக்கு அளக்கப்படும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

இத்தினத்திலாவது எமது குடும்பத்தி லுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறிய பரிசொன்றை கொடுத்து மகிழ்வித்தல் நன்று. இத்தினத்தை கடமைக்கான தினமாக மாற்றாமல் அனுதினமும் எமது குடும்பத்திலுள்ள முதியவர்களை நேசிக்கும் தினமாக மாற்றியமைப் போமாக.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்...

அக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப் படுகிறது. சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கென ஐக்கிய நாடுகள் சபை 1989ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி சிறுவர் தினம் என பிரகடனப்படுத்தியது. அத்தினம் அப்போது முதல் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சனத்தொகையில் கணிசமான வர்கள் சிறுவர்களாவர். இலங்கை சாசனப்படி 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட வர்கள் அனைவரும் சிறுவர்களாவர்.

சிறுவர் தினத்தை கொண்டாட ஆயத் தமாகும் வேளையில் எமது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம், வல்லுறவு, கொலை, சித்திரவதை, சட்ட விரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படல் போன்ற விடயங்கள் பெருகி வருகின் றது. இவற்றுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்?

எமது நாட்டில் 14 வயதுக்கு கீழ்ப் பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவ தற்கு எதிராக சட்டங்கள் இருந்த போதிலும் அநேக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பாடசாலை வாசனையே தெரியாத சிறுவர்கள் பலர். யுத்த சூழ்நிலை, சுனாமி அனர்த்தம் காரணமாக பலர் அநாதைகளாயினர். சிறுவர் இல்லங்களும் பெருகி வருகின் றன. நிர்க்கதிக்குள்ளாகி, ஒடுக்கப்படு வதன் மூலம் பல சிறுவர்கள் வாழ வழியின்றி இளம் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.

‘பிள்ளையை நடத்த வேண்டிய வழி யிலே நடாத்து, முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்’ என்று சாலமோன் தனது நீதிமொழிகளில் குறிப்பிட்டுள்ளார். பிள்ளைகள் இவ்வுலகில் பிறந்தது முதல் அவர்கள் பெரியவர்களாகும் வரை அவர்களை அன்புடன் அர வணைத்து பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகள் தங்களது பெற்றோரையே முன்மாதிரியாக கொள் வார்கள். சிறுபராயம் முதல் அவர்களை சீராக வழிநடத்த வேண்டும். கல்வி, நல் வழி, பக்தி, ஒழுக்கம், பண்பு இவற்றில் வழிநடத்தப்படல் வேண்டும். இவர்கள் முதிர்வயதை அடையும் போது அவர் களை விடாதிருப்பார்கள்.

குடும்ப வறுமை காரணமாக சிறு வர்கள் வேலைக்கு அனுப்பும் துர்ப் பாக்கிய நிலை நிலவுகிறது. அதே வேளையில் தாய்மார் வெளிநாடுகளில் தொழில் செய்வதாலும் பல சிறுவர்கள் அந்நியரால் பல்வேறு சித்திரவதை, கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர்.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலை வர்கள் என்ற தொனியில் பேசப்பட்டா லும் இன்றைய சிறுவர்கள் நல்ல பிர ஜைகளாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் தேவைகள் கண்டறியப்பட வேண்டும். சிறுவர்களின் ஆக்க முயற் சிகளுக்கு செயலுரு கொடுக்கப்பட வேண்டும். கல்வி ரீதியிலான விழிப் புணர்வை உருவாக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை குறித்தும், சட்டவிரோத செயற்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறு வர் துஷ்பிரயோகம், பாலியல் இம்சைகள் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கை குறித்தும் பிள்ளைகளுக்கு அறிவித்தல் வேண்டும். அதாவது பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை வெளிப்படுத்தும் வழிவகைகளை உருவாக்கல் வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் பெற் றோர்கள் தங்களது பிள்ளைகள் குறித்த அவதானத்துடன் இருப்பது அவசிய மானது. அவர்களுக்கு துன்புறுத்தல் வீட்டில், வீதியில், பாடசாலையில், மற்றும் வேறு இடங்களில் என எங்கு நடந்தாலும் அதை குறித்த அறிந்து நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட் டில் சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண் டும் சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக கடும் நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிறுவர்கள் மத்தியில் போட்டி நிலை உருவாகினாலும் பொறாமை உருவாக வண்ணம் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இன்றைய சிறுவர்கள் எமது நாட்டின் சரித்திரத்தை பொன் எழுத்துக் களால் எழுதும் நாளைய தலைவர்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகளை குறித்தான இத்தினத் தில் மகிழ்வூட்டும் நிகழ்வுகள் நடைபெற்றாலும் அவர்கள் சிந்தனை ரீதியில், ஆன்மீக ரீதியிலும், விளையாட் டுத் துறையிலும் தங்களை வலுப்படுத் திக் கொள்ள ஆக்கபூர்வமான செயற் பாடுகளை உள்வாங்க வேண்டும். இம்மண்ணில் பிறந்த குழந்தைகள் அனைவரும் நல்லவர்களே என்பதை தெளிந்துணர்வோமாக.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.