புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று

ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று

வல்லிபுர ஆழ்வார் திருத்தலம் அமைந்துள்ள பிரதேசம் தொன்மை வரலாற்றுப் பெருமைக்குரியது.

சக்கராயுதத்தினை மூலஸ்தானத்தில் கொண்டுள்ள கோவில் தற்போது பாரிய புனரமைப்பின் மூலம் மிகவும் அழகுற மிளிர்கின்றது.

வானோக்கி நிற்கும் இராஜகோபுரம், முப்பெரும் வீதிகள், விசாலமான மணல் பிரதேசங்களும் கோவிலைச் சுற்றியுள்ளன.

கண்ணன் எனும் மாயன் தசாவதாரங்களை உலக ஹேமத்திற்காக எடுத்துக் கொண்டவன். மிகப் பரந்த வடிவுடைய எம் பிரானுக்கு கோவிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசமும் நீண்டு அகன்று இருப்பதும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றேயாம்.

ஸ்ரீகிருஷன் மிகவும் எளிமையானவன் எல்லா உயிர்களிடத்தும் கருணை நிறைந்தவன். அருள் கூரும் வள்ளல் இவன்.

யார் என்னை எப்படி வழிபாடு செய்கின்றார்களோ அவர்களுக்கு நான் அப்படியே அருள் புரிகின்றேன். மக்கள் என்றும் எனது வழியையே பின்பற்றி வருகின்றனர். இறைவன் தன்னை நம்பி வணங்குபவர்களை என்றுமே ஏமாற்றியதுமில்லை.

புலோலி, வராத்துப் பளையில் வாழ்ந்த மூதாட்டியின் கண்ணன் மீதான பிரேமை எல்லையற்றது. அவளது பக்தியின் பொருட்டே, தன்னை வந்து ஆழிக்கரையில் பார் எனச் சொன்னான். அவ்வண்ணமே கண்ணன் அலை மோது கடலில் மீனாகத் துள்ளியோடி லீலைகள் புரிந்து பின்பு குழந்தைக் கண்ணனாக வல்லி நாச்சியாரின் முன்தோன்றினான். பின்னர் அவனே சக்கரவடிவினனாகினான்.

அன்று சக்கரம் விஷ்ணுகையில் துஷ்டர்களை அழிக்கும் ஆயுதமாகும். யுகம் தோறும் கண்ணன் துஷ்ட நிக்ரஹம் செய்து இந்தப் பூமியில் நீதியையும் தர்மத்தையும் நிலை நாட்டி வருகின்றான்.

பகவத் கீதையின் ஞானகர்ம ஹந்யாச யொகதில் கண்ணன் எப்பொழுதெல்லாம் அறம் அழிந்துபோய் மறம் மேலோங்குகின்றதோ அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.

நல்லாரைக் காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களைச் சம்ஹாரம் செய்வதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகம் தோறும் நான் அவதாரம் எடுக்கின்றேன் என்கின்றார்.

இறைவன் கருணை வடிவினன். தாயினும் மேலான தயாளன். மாணிக்கவாசக சுவாமிகள் சிவபுராணத்தில் இவ்வாறு பாடுகின்றார்.

நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாவனே தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!

தேசனே தேனாரமுதே சிவபுரனே.

சிவபுராணம் - மாணிக்க வாசக சுவாமியின் உப நிஷதத்தில் பகவான் ஸ்ரீமத் நாராயணன் பற்றி இவ்வாறு கூறப்பட்டுகின்றது.

அனைத்துள்ளும் கோயில் கொண்டு வாழும் உறுபொருள் நாரயணனேயாவார்.

அவன் மண்ணின் வாயிலாக இயங்குகின்றான். ஆனால் மண் அவனை அறிவதில்லை.

நீரின் வாயிலாக அவன் இயங்குகின்றான் ஆனால் அவனை நீர் அறிவதில்லை.

ஒளியின் வாயிலாக அவன் இயங்குகின்றான். ஆனால் ஒளி அவனை அறிவதில்லை.

காற்றின் வாயிலாக அவன் இயங்குகின்றான் ஆனால் காற்று அவனை அறிவதில்லை.

வான்வெளி வாயிலாக அவன் இயங்குகின்றான். ஆனால் வான் வெளி அவனை அறிவதில்லை.

மனத்தின் வாயிலாக அவன் இயங்குகின்றான். ஆனால் மனம் அவனை அறிவதில்லை.

‘நான் எனும் உணர்வு’ வாயிலாக அவன் இயங்குகின்றான். ஆனால் நான் எனும் உணர்வு அவனை அறிவதில்லை.

மரணத்தின் வாயிலாக அவன் இயங்குகின்றான். ஆனால் மரணம் அவனை அறிவதில்லை.

அன்பான பக்தர்களே மேற்சொன்ன வாசகங்களை நாராயணன் மீது நம்பிக்கை கொண்டு படியுங்கள். திவ்வியப் பரம் பொருளின் மேலா சக்தியையும் இந்த உலக உயிர்களை இவன் இயக்கும் விதமும் அதனை இந்த உலக உயிர்களை இவன் இயக்கு விதமும் அதனை உணராத எமது நிலைமையையும் பஞ்ச பூதங்களை நாராயணன் இயக்குவதையும் புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இறையோன் அருள் இருந்தால் அவன் அருளை ஆன்மாக்கள் புரிந்தும் கொள்ளலாம்.

வல்லிபுர ஆழ்வார் கோவிலில் வருடாந்த மகோற்சவங்கள் பதினேழு நாட்கள் நடைபெறும். அழகான இரதோற்சவ விழா 15ம் திருவிழாவாகவும் 16ம் திருவிழாவாக கடல் தீர்த்த உற்சவமும் 17ம் திருவிழாவாக கேணித்தீர்த்த உற்சவமும் நடைபெறுகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.