புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
திருமணத் திகதியினாலும் தாம்பத்திய வாழ்வில் பிரச்சினை வருமா?

திருமணத் திகதியினாலும் தாம்பத்திய வாழ்வில் பிரச்சினை வருமா?

‘NEGATIVE VIBRATION என்று அடிக்கடி சொல்லுகிaர்களே. அப்படியே சொல்லுகிaர்களே. அப்படி என்றால் என்ன சேர்?’

பொதுவாகவே நவீன எண்சோதிட முறைப்படி பெயரை மாற்றிக் கொடுக்கிறவர்களுக்குத் தான் இது சம்பந்தமாகத் தெரியும். பண்டித் சேது ராமனை அடிப்படையாகக் வைத்து பெயர் மாற்றம் செய்து கொடுக்கிறவர்களுக்கு இது சம்பந்தமாக எதுவும் தெரியவாய்ப்பில்லை.

காரணம், சேதுராமன் தன்னுடைய நூலில் NEGATIVE VIBRATION சம்பந்தமாக எதையும் குறிப்பிடவில்லை. அதுவுமில்லாமல் அவருடைய ஆய்வுகளின் முரண்பாடு இருப்பதாக இப்போது பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக 37 ஆம் எண்ணில் பெயர் வைப்பது மிகவும் அதிர்ஷ்டமானது என்று அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நவீன எண் சோதிட ஆய்வுகளின்படி 37 ஆம் எண்ணில் பெயர் வைப்பது என்பது ஆபத்தானது என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி வைப்பதால் திடீர் திடீர் என்று விபத்துக்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அது சம்பந்தமான நீண்டதொரு எடுத்துக் காட்டும் காட்டப்பட்டுள்ளது. அதாவது ஏன் விபத்து நடக்கிறது என்றும் விபரமாக குறிப்பிட்டுள்ளார்.

NEGATIVE  என்றால் எதிர்மறையான என்று பொருள்படும் அதே போல் VIBRATION என்றால் அதிர்வு என்றும் பொருள்படும். இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது எதிர்மறையான அதிர்வு என்று பொருள்படும். சில பெயர்கள் இந்த எதிர்மறையான அதிர்வில் அமைந்திருப்பதால் அந்தப் பெயரில் இயங்குகிறவர்களின் வாழ்க்கை சிறப்புற்றுக் காணப்படும். பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வியிலேயே முடியும். சிலருக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால், நிம்மதி மட்டும் இருக்காது. இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய பெயராகத்தான் இருக்கும்.

இப்படி NEGATIVE VIBRATION இனில் வரும் ஒரு பெயரை எடுத்து கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். மன்சூர் அலிகான். இந்தப் பெயர் நான் குறிப்பிட்ட அந்த எதிர்மறையான அதிர்வில்தான் வருகிறது.

பெயரின் ஆரம்பமே ‘மன்’என்று தான் உச்சரிக்கப்படுகிறது. மண் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும் தானே. எழுதுவதில் வித்தியாசம் இருந்தாலும் ‘பொருள்’ என்று பார்க்கும் போது அதாவது உச்சரிப்பில் அது வேறு விதமாகவே இருக்கும். அடுத்ததாக அந்தப் பெயரில் ‘அலி’ என்று என்று வருவதையும் கவனிக்க வேண்டும்.

‘அலி’ என்றால் என்ன வென்று உங்களுக்குத் தெரியும் தானே. ‘தேள்’ என்றும் இதற்கு ஒரு பொருள் இருக்கிறது.

இனி இந்த மன்சூர் அலிகான் என்ற பெயரில் இயங்குகிறவர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

குறிப்பிட்ட ஒரு கால கட்டம் வரை இவர்களின் வாழ்க்கை ஓஹோ... என்றிருக்கும். அதன் பிறகு சிறிது காலத்திற்கு இவர்கள் தலைமறைவாகி விடுவார்கள். எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டியிருக்கும். இன்னும் ஒரு சிலரது தாம்பத்திய வாழ்வில் நிறையவே பிரச்சினை காட்டிக் கொள்ளாமல் திறமையாக நடிப்பார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று சொல்வார்கள் அல்லவா. அது இந்தப் பெயரில் உள்ளவர்களுக்குப் பொருத்தமாகவே இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு திடீரென்று ஏதாவது பிரச்சினைகள் வந்துக் கொண்டேயிருக்கும். சில சமயங்களில் வியாபாரத்தில் கூட நஷ்டம் ஏற்படலாம்.

புகழ் கிடைத்தாலும் அந்தப் புகழை தக்க வைத்துக் கொள்வதற்காக நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கும். இந்த மாதிரியான இன்னும் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மன்சூர் அலிகான் என்ற பெயரில் ஒரு நடிகர் இருக்கிறார். இவருடைய நடவடிக்கைகளையும் இவரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் நான் சொல்வதில் இருக்கும் யதார்த்த நிலையை நீங்களும் புரிந்து கொள்ளலாம்.

திருமணம் செய்து கொள்கிறவர்கள் முக்கியமான ஒரு விடயத்தைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, திருமணம் செய்து கொள்ளும் போது ஜாதக பொருத்தம் பிறந்த திகதி பொருத்தம் மட்டும் பார்த்தால் போதாது. திருமணம் செய்து கொள்ளப் போகிற திகதியின் பொருத்தத்தையும் பார்க்க வேண்டும்.

எப்படி?

நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிற திகதி அதிர்ஷ்டமானது என்பதை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும் இதை எப்படி பார்ப்பது என்று கொஞ்சம் ஆராய்வோம். ஓர் எடுத்துக் காட்டு.

நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிற திகதி 4.7.2016 என்று வைத்துக் கொள்வோம். இதை நவீன எண் சோதிட முறைப்படி பிரித்துக் கொள்ள வேண்டும். எப்படி?

4-7-216=

4-7-9 - 2

திகதி 4 மாதம் 7 வருடம் 9 கூட்டுத் தொகை 2 என்று வரும் இதன்படி பார்க்கும் போது இந்த திகதியில் நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்கள் வயது முப்பதுக்குள் இருந்தால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும் இறுதியில் அது விவாகரத்திலும் போய் முடியலாம். அடுத்தது வருடத்தில் 9ஆம் எண்ணும் கூட்டுத் தொகையில் 2 ஆம் எண்ணும் வருகிறது. இப்படி இருந்தால் 45 வயதிற்குப் பிறகு விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று பொருள்.

எனவே, இந்தத் திகதியில் உங்கள் திருமணத்தை நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.

இன்னுமொரு திகதியையும் பார்ப்போம். 6.3.2016 குறித்துக் கொள்வோம். இதன்படி 6--9-9 என்று வரும் முப்பது வயதிற்குள் திருமணம் செய்து கொண்டால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் தாமதமாகும். அல்லது இருக்காது. அதே போல் திருணமத் திகதியில் கூட்டு எண் 7 என்று வந்தால் அந்த தாம்பத்திய வாவில் பிரச்சினைகள் ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடியும்.

இப்படியே ஒவ்வொரு திகதிக்கும் பலன்கள் இருக்கிறது. இதனால் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் போது, உங்கள் பிறந்த திகதிக்கு அதிர்ஷ்டமான திகதியிலும் தீமையான பலன்கள் தராத திகதியாகவும் பார்த்து திகதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து வாரமும் பயனுள்ள ஆக்கம் ஒன்றுடன் சந்திக்கும் வரையில் ஐயங்களைப் போக்கிக் கொள்ள அழுத்த வேண்டிய எண்கள் 0777686741.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.