புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
இலங்கையின் முன்னாள் பிரதமர் SWRD பண்டாரநாயக்கவின்

இலங்கையின் முன்னாள் பிரதமர் SWRD பண்டாரநாயக்கவின்

நினைவு தினம் september 26

1899ம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ம் திகதி மகா முதலியார், சேர் சோலமன் டயஸ் பண்டாரநாயக்கவுக்கு ஒரே மகனாக பிறந்தவர் சோல மன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க எனப்படும் எஸ் டபிள்ய+ ஆர். டி. பண்டாரநாயக்க. இவர் தனது இளமைக்காலத்தில் கல்லூரி படிப்பினை சென் தோமஸ் கல்லூரியில் மேற்கொண்டு கடந்த 1919 ம் ஆண்டு, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்று, ஒரு வழக்கறிஞராக நாடு திரும் பினார். அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றபோது, ஒரு தலை சிறந்த பேச்சாளராக கணிக்கப்பட்டதோடு, 1923ம் ஆண்டு, ஒக்ஸ்போர்ட் ய+னி யன் செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டார். அதற்கமைய தனது ஒக்ஸ் போர்ட் கல்வியினை நிறைவுசெய்து ஒரு பட்டதாரியாகவும், பரிஸ்டராகவும் கடந்த 1925 ம் ஆண்டு இலங்கைக்கு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 1927ம் ஆண்டு எஸ். டபிள்ய+. ஆர். டி. பண்டாரநாயக்க கொழும்பு மாநகரசபை அங்கத்தவராக தெரிவுசெய்யப்பட்டார். மேலும் கடந்த 1931ம் ஆண்டு ஸ்டேர்ட் கவுன்சில் அங்கத்தவராக தெரிவுசெய்யப்பட்ட அவர், வியாங்கொட நகரசபையின் ஒரு அங்கத்தவராக செயற்பட்டார். மேலும் 1947 ம் ஆண்டு, அத்தனகல்லேய தொகுதியிலும் அவர் அங்கத்தவராக செயற்பட் டார். இந்நிலையில் டீ. எஸ். சேனாநாயக்கவும், எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டார நாயக்கவுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக கடந்த 1951 ம் ஆண்டு, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உருவாக்கி ஸ்தாபக தலைவராகவும் செயற்பட்டார்.

மேலும் அவர் பாராளுமன்ற அங்கத்தவராகவும் தெரிவுசெய்யப்பட்டார். அவ ரின் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் தூரநோக்கு சிந்தனைகள் என்பன மக்களை பெரிதும் ஈர்த்த நிலையில் 1956 ம் ஆண்டு, இடம் பெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றியீட்டி இலங்கையின் 4 ஆவது பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார். ஆரம்பம் தொட்டே தேசப்பற்றுமிக்க ஒருவராக செயற்பட்ட எஸ் டபிள்ய+ ஆர் டி பண் டாரநாயக்க, தேசியத்தை நிலைநாட்டும் வகையில்’ அவரின் தலை மையில் சிங்கள மகாசபையை உருவாக்கினார். அதன் மூலம் நாட்டிற்கு உகந்த செயற்திட்டங்களை உருவாக்கி, கல்வி, சமூக, மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதை இலட்சியமாக கொண்டு செயற் பட்டார். சிங்கள மக்களுடன். இணைந்து ஏனைய இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்து வழியமைக்க வேண்டுமென விரும் பிய எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்க, சிங்கள மொழியை அரச கரும மொழியாக அங்கீகரிப்பதில் முன்நின்று செயற்பட்டார்.

இந்நிலையில் கடந்த 1940 ம் ஆண்டு, தனது சிறிமாவோ ரத் வத்தவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை அக்காலப்பத்திரிக்கைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இல் லற பந்தமென வர்ணித்திருந்தன. தனது கணவனின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு சிறிமாவோ பண்டாரநாயக்க பக்கபலமாக முன்நின்று உழைத்தார்.

இந்நிலையில் கடந்த 1951 ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட் சியை ஸ்தாபித்த எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்க, பௌத்த பிக்குமார், சுதேசிய வைத்தியர், ஆசிரியர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய சக்திகளை ஒன்று திரட்டினார். இதனிடையே நாட்டு மக்களின் அரசியல், சமூகம், கலாச்சாரம் என அனைத்து விடயங்களிலும் புதியதொரு மாற்றத்தை கொண்டுவர எண்ணிய எஸ் டபிள்ய+ ஆர் டி பண் டாரநாயக்க, கடந்த 1956 ம் ஆண்டு, பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். பல்வேறு தடைகள், அரசியல் சு+ழ்ச்சிகளுக்கு மத்தியில் நாட்டுக் கான தனது பணியை முன்னெடுத்த பெருந்தலைவர் எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்க ஆவார்.

தனது ஆட்சிக்காலத்தில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்து, மக்கள் மனதில் நீங்கா இனம் பிடித்திருந்த தலைவர் எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்க, கடந்த 1956 ம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 25 ம் திகதி, துப்பாக்கி பிரயோகமொன்றுக்கு இலக்காகினார். குறித்த தாக்குதலால் காயங்களுக்கு உள்ளான எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்க, கடந்த 1956 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ம் திகதி உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து, அவரது மனைவி சிறி மாவோ பண்டாரநாயக்க உலகின் முதலா வது பெண் பிரதமராக பதவியேற்றார். அத னைத்தொடர்ந்து, பண்டாரநாயக்க தம்பதியி னரின் இளைய புதல்வியான சந்திரிகா பண்டாரநாயக்க, இலங்கை நாட்டின் முத லாவது பெண் ஜனாதிபதியாக தெரிவாகி ஆட்சிசெய்தார். இந்நிலையில் அவரின் ஞாபகார்த்தமாக கொழும்பு டொரின்டனில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரை மேலும் கௌரவப் படுத்தும் முகமாக இலங்கையின் பழைய பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அதா வது தற்போதைய ஜனாதிபதி செயலகத் தில் அவரின் உருவச்சிiயும் அமைக்கப்பட் டது. இலங்கை வரலாற்றில் அரசியல், பொரு ளாதாரம், சமயம், பண்பாடு, ஆகியவற்றை சீரான முறையில் பேணி, சிறந்த அரசியல் வாதியாகவும், முற்போக்கு சிந்தனையாள ராகவும், நாட்டின் எல்லோராலும் தலைவ ராக போற்றப்பட்டவருமான இலங்கை திரு நாட்டின் முன்னாள் பிரதமர் எஸ் டபிள்ய+ ஆர் டி பண்டாரநாயக்கவின் பெயர், இலங்கை வரலாற்றின் என்றும் அழிக்க முடியாத கல்வெட்டு.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.