புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

ஒரு வழியாக ரிலீஸாகிறது கில்லாடி!

ஒரு வழியாக ரிலீஸாகிறது கில்லாடி!

பரத், நிலா ஜோடியாக நடிக்க ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் கில்லாடி. தயாரிப்பாளர் சந்திரசேகரன். இசை ஸ்ரீகாந்த் தேவா. கடந்த 2006ம் ஆண்டு இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. பு+iஜ போட்ட கையோடு வேகமாக படப்பிடிப்பையும் தொடங்கினர். கிட்டத் தட்ட முக்கால்வாசிப் படத்தை முடித்தும் விட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் தயாரித்த பிப்.14, சுள்ளான், சபரி படங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டதால், கில்லாடி பைனான்ஸ் சிக்கலில் மாட்டி, பாதியில் நின்றது.

பரத் பலமுறை கால்'Pட் கொடுத்தும் படம் முன்நகரவில்லை. ஒரு கட்டத்தில் பரத், நிலா, ஏ.வெங்கடேஷ் என அனைவரும் ஒத்து ழைப்பு தர படத்தை 2013ம் ஆண்டு எடுத்து முடித்தனர். இதனால் படம் விரைவிலேயே ரிலீஸாகலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அதுதான் இல்லை. இடையில் பலமுறை படம் ரிலீஸ் குறித்து பத்திரிகைகளில் அவ்வப்போது விளம்பரம் செய்ததோடு சரி, படம் வெளியாகவில்லை. இந்நிலையில் கில்லாடி படத்தை பல கஷ்டங்களை தாண்டி தற்போது வரும் 30ம் தேதி வெளியிடுவது என்பது உறுதியாகிவிட்டதாம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.