புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

கௌதம் கார்த்திக்கு ஜோடியான புதுமுகம்!

கௌதம் கார்த்திக்கு ஜோடியான புதுமுகம்!

கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக புதுமுகம் சனா மக்பு+ல் நடிக்கிறார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் நிறுவனமான ஏ.ஆர்.எம் புரொடெக்சன்ஸ் நிறுவனமும், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ரங்கூன். இந்தப் படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். படத்துக்காக தனது கெட்டப்பை மாற்றி நடிக்கவிருக்கிறாராம் கௌதம். நாயகி தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

இந்நிலையில் நாயகியாக புதுமுகம் சனா மக்பு+ல் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர், தெலுங்கில் 'டிக்குலு சு+டக்கு ராமய்யா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ராஜ் குமார் பெரியசாமி. இவர் இயக்குனர் முருகதாசிடம் 'துப்பாக்கி' படம்வரையிலும் இணை இயக்குனராக பணியாற்றியவர். எம்.சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்க இசையமைக்கிறார் அனிருத்.

இளைஞர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின் கதை உருவாகியுள்ளதாம். இதனிடையே கௌதம் கார்த்திக்கின் வை ராஜh வை, சிப்பாய் ஆகிய இரண்டு படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர அவர் இந்திரஜpத் என்ற படத்திலும் பிஸியாக உள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.