புத் 67 இல. 04

ஜய வருடம் தை மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 04

SUNDAY JANUARY 25 2015

 

 

குளோபல் றபர் நிறுவனம் மற்றும் குளோபல் சீஃபூட் நிறுவனங்களுக்கு தேசிய வர்த்தக சிறப்பு விருது

குளோபல் றபர் நிறுவனம் மற்றும் குளோபல் சீஃபூட் நிறுவனங்களுக்கு தேசிய வர்த்தக சிறப்பு விருது

குளோபல் குழுமத்தின், குளோபல் றபர் இன்டர்ஸ்ரீஸ் (GRI) மற்றும் குளோபல் சீஃபூட் (GSF)தனியார் நிறு வனங்களுக்கு அண்மையில் தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் வழங்கப ;பட்டன. "ஏனைய உற்பத்திகள்" என்ற பிரிவில் GRI தங்க விருதினையும் மற்றும் சிறந்த உலகளாவிய "சந்தை அணுகுமுறை" என்ற பிரிவுக்கான வெள்ளி விருதினையும் வென்றெடுத் துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விருது வழங்கும் நிகழ்வை இலங்கை வர்த்தக சம்மேளனம், ஏற்பாடு செய் திருந்ததோடு இலங்கையிலுள்ள முதல் நிலையிலுள்ள நிறுவனங்களில் இந்த விருதுக்கான போட்டியில் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புளுகுஇ சிறந்த தரத்திலான கடல் உணவு செயன்முறை மற்றும் ஏற்றுமதி செய்வதில் முன்னிலை வகிப்பதோடு அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் விநியோகி ப்பதற்காக "கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை" பிரிவில் தங்க விருதினையும் வென்றது. புளுகு, தமது வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேண்டிய உயர் தரத்திலான பொருட்களையும் சேவை களையும் வழங்குவதில் முன்னிலை வகிக்கிப்பதோடு, அவர்களது சர்வ தேச வாடிக்கையாளர்களுக்கு சிறந்த உறுதியையும் வழங்குகின்றது.

2002இல் ஆரம்பிக்கப்பட்ட GRI நிறுவனம் உலகம் முழுவதிலும் 50க் கும் அதிகமான நாடுகளில் திறன்பட்ட செயன்முறைகளில் இலங்கையில் தயாரிக்கப்படும் சொலிட் டயர்களை விநியோகித்து வருவதோடு, சிறந்த தரத்திலான கடல் உணவுப் பொருட் களை புளுகுஏற்றுமதி செய்து சர்வ தேசத்தில் தனக்கென ஒரு பெயரை பதியவைத்துக்கொண்டுள்ளதாக குளோபல் குழுமத்தின் முகாமைத் ;துவப் பணிப்பாளர் பிரபாஷ் சுபசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,"பரந்த உலகின் நன்மையைக் கருத்திற் கொண்டு நாம் எமது உற்பத்திகளை, செயலாக்கத் திறன்களை, மேம்படுத்தி தயாரிப்புக்களை அதிகரித்து வர்த்தக கூட்டமைப்பை வலுப்படுத்தி, எமது வணிக செயற்பாடுகளை முன்னெடு க்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.