புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
ஜனாதிபதியை நம்பி வந்தால் மக்களுக்கு சேவை செய்யலாம்

வயம்பவில் தயாசிறி போன்று கொழும்பில் மனோ கணேசன் வரலாம்

ஜனாதிபதியை நம்பி வந்தால் மக்களுக்கு சேவை செய்யலாம்

முதுகில் குத்தும் ரணிலை இனியும் நம்ப வேண்டுமா?

கண்டி மாவட்டத்திலும், நுவரெலியா மாவட்டத்திலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது கட்சி வேட்பாளர்களை ஐ. தே. கட்சியில் நிறுத்தியிருந்த பொழுதிலும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட மனோவின் வேட்பாளர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். நுவரெலியா மாவட்டத்தில் அவரது குரு வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியிருந்தனர். இதற்கு மனோ கணேசன் தெரிவித்திருந்த கருத்துக்களில் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய செல்வாக்கு சரிவு என்பதை ஊடகங்களில் பகிரங்கமாக ஏற்று கொண்டிருந்தார்.

அது மட்டுமல்ல கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போது ரணிலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ரணில் தன்னை ஏமாற்றி விட்டார், முதுகில் குத்திவிட்டார். என்பதையும் தெரியப்படுத்தியவர் மனோ கணேசன். இந்த வகையில் செல்வாக்கு இழந்து கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டமைப்பைவிட்டு விட்டு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் சுகாதார கல்வி, வீடு வசதி போன்ற அபிவிருத்தி பணிகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது நம்பிக்கை வைத்து ஜனாதிபதியின் தலைமையிலான ஆளுங்கட்சியுடன் கூட்டு வைப்பதால் தமிழ் மக்களின் விமோசன வாழ்க்கைக்கு உந்துசக்தியாக அமையும் என்பதை மனோ கணேசன் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது வடமேல் மாகாணத்தின் தேர்தலில் ஐ.தே.கவை விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்ததன் மூலமாக மிகப்பெரும் வெற்றி பெற்ற ஒரு தயாசிறியாக ஏன் மனோகணேசன் மேல் மாகாணத்தில் கொழும்புவாழ் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக அரசு பக்கம் மாறக்கூடாது எனவும் ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.