புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 


 

வயம்பவில் தயாசிறி போன்று கொழும்பில் மனோ கணேசன் வரலாம்

ஜனாதிபதியை நம்பி வந்தால் மக்களுக்கு சேவை செய்யலாம்

முதுகில் குத்தும் ரணிலை இனியும் நம்ப வேண்டுமா?

கண்டி மாவட்டத்திலும், நுவரெலியா மாவட்டத்திலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது கட்சி வேட்பாளர்களை ஐ. தே. கட்சியில் நிறுத்தியிருந்த பொழுதிலும் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட மனோவின் வேட்பாளர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். நுவரெலியா மாவட்டத்தில் அவரது குரு வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியிருந்தனர். இதற்கு மனோ கணேசன் தெரிவித்திருந்த கருத்துக்களில் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய செல்வாக்கு சரிவு என்பதை ஊடகங்களில் பகிரங்கமாக ஏற்று கொண்டிருந்தார்.

                                                           விவரம் »

மாத்தறையில் UNP ஆதரவாளர்கள் ஏட்டிக்குப் போட்டியாக ஊர்வலம்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் எழுவர் காயம்

மாத்தறை நகரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதலில் எழுவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. மோதல் ஏற்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக இவர்கள் காயமடைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

                                                           விவரம் »

கூட்டமைப்பின் முடிவிற்கு தமிழ் மக்கள் வரவேற்பு

இதே வேகத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் கண்டுவிட வலியுறுத்தல்

ஜனாதிபதி மஹிந்தவின் பேராளுமைமிக்க தலைமைத்துவத்திற்கு புத்திஜீவிகள் பாராட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெள்ளியன்று நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் தெரிவித்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி முழு நாட்டு மக்களுமே தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

                                                            விவரம்»

இறுதி என்ற சொல்லில் அர்த்தம் இல்லை: காலத்திற்கேற்ப கருமமாற்ற வேண்டும்

ஜனாதிபதியுடனான பேச்சுக்கள் தொடரும் மக்கள் விரும்பும் முடிவுகளை எடுப்போம்

முக்கிய விடயங்கள் பேசப்பட்டன ; அடுத்த சுற்று விரைவில் - சம்பந்தன்;

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தான் சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரி வித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்த அவர் தொடர்ந்து பேசி எங்களுடைய மக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய முடிவுகளை நாங்கள் எடுப்போம். இறுதி என்ற சொல்லில் அர்த்தம் இல்லை.

                                                           விவரம் »


பேரறிஞர் கலாநிதி ஏ.எம்.ஏ. அkஸின் ஞாபகார்த்த தின நினைவுப் பேருரை நிகழ்வில் கலாநிதி எம்.ஏ. நுஃமான் பேருரை நிகழ்த்த “அkஸ்- இளமை வாழ்வும் புகழாரமும்” எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அkஸ் மன்ற தலைவர் கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல், சிரேஷ்ட ஊடகவியலாளர் பி. பாலசிங்கம் உட்பட பிரமுகர்கள் படத்தில் காணப்படுகின்றனர். (படம்: ஏ.எஸ்.எம். இர்ஷாத்)

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.