புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 

ஆடைத்தொழில் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ப்ரிவிலேஜ் அட்டை அறிமுகம்

ஆடைத்தொழில் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ப்ரிவிலேஜ் அட்டை அறிமுகம்

அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி நுகர்வோர் வர்த்தக நாமங்கள் மற்றும் விற்பனையகங்கள் இணைந்து ஆடைத் தொழில் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ப்ரிவிலேஜ் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. ஆடைத்தொழில் துறையில் பணி யாற்றும் ஊழியர்களின் நலன் கருதி இந்த விசேட அட்டை ஜh/வ் (JAAF) அமைப்பின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடைத் தொழில் துறையை சேர்ந்த சகல ஊழியர்க ளுக்கும் அனுகூலம் சேர்க் கும் வகையில், அவர்களுக்கு அவசியமான பல பொருட்களில் விலைக்குறை ப்பையும், விலைத்தள்ளுபடிகளையும் வழங்கும் வகை யில் இந்த அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 'ரன்சலு பிரணாம" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து ஜh/வ் (JAAF) அமைப்பின் பொதுச் செயலாளர் ^லி குரே கருத்து தெரிவிக்கையில்;, "ஆடைத் தொழில் துறைக்கு ஊழியர்கள் வழங்கி வரும் பங்களிப்பை ஊக்கு வித்து அவர்களை கௌரவிக்கும் முகமாக நாம் இந்த சேவை யை அறிமுகம் செய்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் ஒரு துறையாக இது அமைந்துள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதியில் முக்கிய பங்களிப்பை வழங்கும் இந்த துறையின் ஊழியர்களுக்கு புதுவிதமான ஒரு சேவையை நாம் வழங்க தீர்மானித்த போது, இந்த திட்டம் குறித்த சிந்தனை உதித்தது" என்றார்.

இலங்கையின் ஆடைத்தொழில் துறையை மேற்பார்வை செய்யும் அமைச்சான தொழில்துறை மற்றும் வர்த்தக விவகார அமைச்சின் அங்கீகாரத்தை இந்த செயற்திட்டம் பெற்றுள்ளது.

இந்த விசேட சேவைகள் நாடு முழுவதும் வழங்கப்படவுள்ளதுடன், ஆடைத் தொழில் துறையில் பணியாற்றும் சகல ஊழியரும் பிரணாம அட்டைக்கு உரித்துடையவராவார். இந்த அட்டையை அவர்கள் பங்காண்மை விற்பனையகங்களில் சமர்ப்பித்து விலை கழிவுகளை பெற்றுக் கொள்ள முடியும். தனியார் துறையில் மிகப்பெரிய சுப்பர் மார்க்கெட் தொடரான கார்கில்ஸ் /புட் சிட்டி, தேசிய தொலைத்தொடர்பாடல்கள் சேவைகளை வழங்கும் ஸ்ரீலங்கா ரெலிகொம், தேசிய மொபைல் தொலைத்தொடர்பாடல்கள் சேவைகளை வழங்கும் மொபிடெல் ஆகியவற்றிடமிருந்து அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.