புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
ஜனாதிபதியுடனான பேச்சுக்கள் தொடரும் மக்கள் விரும்பும் முடிவுகளை எடுப்போம்

இறுதி என்ற சொல்லில் அர்த்தம் இல்லை: காலத்திற்கேற்ப கருமமாற்ற வேண்டும்

ஜனாதிபதியுடனான பேச்சுக்கள் தொடரும் மக்கள் விரும்பும் முடிவுகளை எடுப்போம்

முக்கிய விடயங்கள் பேசப்பட்டன ; அடுத்த சுற்று விரைவில் - சம்பந்தன்;

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தான் சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரி வித்துள்ளார்.

இந்த பேச்சு வார்த்தை மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்த அவர் தொடர்ந்து பேசி எங்களுடைய மக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய முடிவுகளை நாங்கள் எடுப்போம். இறுதி என்ற சொல்லில் அர்த்தம் இல்லை. நாங்கள் அந்தந்த காலத்திற்கு ஏற்ற வகையில் கருமங்களை கையாள வேண்டும். நாங்கள் பேசுறம் இறுதியில் நல்ல முடிவு எடுப்போம். எல்லாருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் அந்த முடிவுகள் அமையும்.

வட மாகாண முதலமைச்சர் பதவியேற்பு மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

பல விடயங்களைப் பற்றி ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம். மாகாண சபை என்னவிதமாக செயற்படப் போகின்றது. அமைச்சர் பதவிகளை என்னவிதமாகப் பிரிக்க வேண்டும் என்னென்ன கருமங்கள் ஒவ்வொரு அமைச்சுக்கும் வரவேணும், என்னவிதமாக இந்த கருமத்தை கையாள்வது முதலமைச்சருடைய சத்தியப்பிரமாண விடயம் சம்பந்தமாக ஏனைய அமைச்சர்களுடைய சத்தியப்பிரமாணம் சம்பந்தமாக மாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் சம்பந்தமாக பல விடயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். தொடர்ந்து பேசுவோம்.

ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளேன். அவர் நாட்டினுடைய ஜனாதிபதி. அவருடைய செயலாளர் என்னை அழைத்தார். அந்த அழைப்பின் அடிப்படையில் நான் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளேன். பல முக்கியமான விடயங்களைப் பற்றி பேசியிருக்கின்றோம். எமது பேச்சுவார்த்தை தொடரும். அதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் தாமதமில்லாமல் விரைவில் பொருத்தமான இடத்தில் அப்பேச்சுக்கள் நடைபெறும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.