புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

தாயும் மகளும் கோரக் கொலை

தாயும் மகளும் கோரக் கொலை

வெல்லவாய குடாஓயா பிரதேசத்தை சேர்ந்த எண்பத்தைந்து வயதுடைய தாய் கொக்கலகே இங்ஹாமி, இவருடைய மகளான ஐம்பத்தெட்டு வயதுடைய “பேபிஹாமி” ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த மாதம் ஐந்தாம் திகதி வழமைபோல் திலகலதா கூலிவேலைக்கு செல்வதற்காக பேபிஹாமி வரும்வரை காத்திருந்தார். ஆனால் அவரோ வரவில்லை. பல வருடகாலமாக இவர்களிருவரும் தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவாயை தேடிக்கொண்டனர்.

அன்றைய வேலையை முடித்துக் கொண்ட திலகலதா, பேபிஹாமினேயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது பேபிஹாமியும் அவரது தாயாரும் கீழே சாய்ந்த நிலையில் காணப்பட்டனர். அதிர்ச்சியடைந்த திலகலதா சப்தமிட்டதும் அயலவர் அங்கு கூடினர். செய்தி வெல்லவாய பொலிஸ் நிலையத்தையெட்டியதும் அங்கு வந்த பொலிஸார் திலக லதாவிடம் விசாரணைசெய்தனர்.

இருவரது உடலிலும் எவ்விதக் காயங்களுமிருக்கவில்லை. இரத்தம் உடலின் கீழ் பகுதியிலும் உடைகள் காணப்பட்டதால் இவர்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ஸ்தலத்துக்கு வந்த வெல்லவாய மஜிஸ்திரேட் ஜயனிபெரேரா மரண விசாரணைக்கு சடலங்களை ஒப்படைக்குமாறு பணித்தார்.

பிரதிபொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டு, மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையை அடுத்து வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். வயோதிப இங்ஹாமிக்கு மூன்று பிள்ளைகள், மகள் பேபி ஹாமிக்கு ஒரு மகளும் இரு மகன்களுமுள்ளனர்.

இதில் ஒருவர் கொழும்பில் தொழில்புரிபவர். இவரது பெயர் சிரிபால. பேபிஹாமினே ஒருவாறு களுபண்டாவை திருமணம் செய்தார். களுபண்டா முதலாளி என்று அழைக்கப்பட்ட இவரது வீட்டில் பேபிஹாமினேயுடன் அவரது தாயாரும் தங்கினார். வீட்டில் சிறிய கடையொன்றை நடத்திவந்த முதலாளி விஷக் கடிக்கு பரிகாரமளித்தும் வந்தார். களுபண்டா ஏற்கனவே திருமணம் செய்து மனைவியை இழந்தவர் இவரது பிள்ளைகள் திருமணமுடித்து அயல் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

களுபண்டா பேபிஹாமினேயை திருமணம் செய்து வாழும், ஒன்றறை ஏக்கர் காணி களுபண்டாவின் இளைய சகோதரிக்கு உரிமையானதாகும். இவரது மகனின் பெயர் அமரே. இந்தக் காணியை களுபண்டா தன் முதல் மனைவியின் மகன் நந்தசிறியின் பெயருக்கு மாற்றம் செய்தார். இவை ஏழு ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்றதாகும்.

ஒன்றரை ஏக்கர் காணிதன் தாயின் பெயரில் இருப்பதாக அமரே எண்ணியிருந்தார். நந்தசிறியின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை காலங்கள் கடந்தன திடீரென களுபண்டா முதலாளி நோயால் பீடிக்கப்பட்டார். இவரையும் தன் தாயையும் பராமரிக்கும் பொறுப்பு பேபிஹாமினேயைச் சேர்ந்தது. தன் கணவனையும் தாயையும் கவனிக்க பேபிஹாமினே பல இடங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றார். இவருடன் அயலில் வசிக்கும் திலகலதாவும் சென்றார். கடந்த பெப்ரவரி மாதம் கணவர் களுபண்டா இறந்தார்.

பேபிஹாமினேயுடன் வேலைக்கு செல்லும் திலகலதா கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர். இவர் அமரேயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். களுபண்டா முதலாளியின் தங்கை மகன்தான் அமரே என்பவராகும். திலகலதா அமரே காதலர்களின் இரகசியத் தொடர்பை ஒருவரும் அறிந்திருக்கவில்லை.

வயோதிப இன்ஹாமினேயும் பேபிஹாமியும் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளரென்று மரண விசாரணை அறிக்கை வெளியானது. இரு பெண்களும் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச் செய்திகளை அறிந்த ஊர்வாசிகள் கொதித்தெழுந்தனர்.

இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பினும் சாட்சிகளில்லாததால் எவரும் கைது செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்ட இன்ஹாமினேயின் மகன் சிறியாலும் விசாரிக்கப்பட்டார். தான் கொழும்பில் வேலை செய்வதாகவும் தான் மனை வியுடன் களுபண்டாவின் வீட்டிற்கு வருவதை அவரது உறவினர்கள் விரும்பவில்லை யென்றும் ஒருமுறை தன்னை வீட்டிலிருந்து செல்லுமாறு பணித்ததாகவும் சிறிபால பொலிஸாரிடம் தெரிவித்தார்.

இவ்விரட்டை கொலைகளின் சூத்திரதாரிகளை கைது செய்ய பிறிதொரு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டது. கடந்த மாதம் பதின்மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை பிரதிபொலிஸ்மா அதிபரின் ஆலோசனையை அடுத்து உப பரிசோதகர் நந்தனவின் தலைமையில் மாற்றுடையில் பொலிஸ் குழு செயல்பட்டது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் இன்னும் இருவரும் முச்சக்கரவண்டியில் மாறுவேடத்தில் தேடுதல் நடாத்தினர்.

கொலை இடம்பெற்ற சமயம் குற்றவாளிகள் சிக்க வேண்டுமென காளி அம்மனுக்கு தேங்காய் உடைத்த சம்பவம் பற்றியும் அவற்றில் புஷ்பானந்தா, கொலுபொட்டா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை யென்றும், தேங்காய் உடைத்தவர்களை புஷ்பானந்த ஏசியதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இவர்களிருவர் பற்றியும் மாற்றுடையிலுள்ள பொலிஸார் விபரம் தேடினர். இவர்களிருவருடன் தெபரா என்பவர். கொலை நடைபெறுவதற்கு முன்தின மிரவு கலிமில்லாவ நதியருகில் மது அருந்தியுள்ளார். முதலில் கொலு பொட்டாவை கைது செய்யநடவடிக்கை எடுத்த பொலிஸார். எங்கள் முதலாளிக்கு அப்பொருள் (கஞ்சா) இரண்டு கிலோ தேவை முதலாளி முச்சக்கரவண்டியிலுள்ளார் சற்று உள்ளே சென்று விலைபற்றி பேசலாம் என்றதும் கொலுபொட்டா உள்ளே சென்றார்.

உள்ளேயிருந்த பொலிஸ் அதிகாரி அவரை வரவேற்று அமரச் செய்தார் இரு பொலிஸார் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தனர் வண்டி புறப்பட்டது. துப்பாக்கியை எடுத்தபொலிஸார் அவனது தலையில் குறிவைத்து நாம் பொலிஸார் உண்யை கூறு .... ஐயோ சார் என்னை ஒன்றும் செய்யவேண்டாம். நான் உண்மையை கூறுகிறேன் என்றான். பிரதான சந்தேக நபரான கொலுபொட்டா.

நான் மட்டுமல்ல சார், புஷ்பானந்த, தெபர ஆகியோரும் இதற்கு உடந்தை ஏன் அந்த அப்பாவிபெண்களை கொன்aர்கள் என்றுகேட்டபோது, எங்களுக்கு ஒன்றும் தெரியாது சார் காரியத்தை முடித்துக்கொடுத்தால் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக புஷ்பானந்த அண்ணன் சொன்னார். அதனால் செய்தோம் என்றான் கொலுபொட்டா.

அந்த வாக்குமூலத்தையடுத்து ‘தெபரா’ கைது செய்யப்பட்டான். இராணுவ சேவையிலிருந்து தப்பிவந்த இவர் ஐந்து அல்லது ஆறு சம்பவங்களுக்காக விளக்கமறியலிலிருந்து வெளியேறி கறுவா விற்றுவந்துள்ளார். தான் அவர்களுடன் சென்றாலும் கொலை முயற்சியிலீடுபடவில்லை யென்றும் தான் வெளியே நின்று எவராவது வருகிறார்களா என நோட்டமிட்டதாகவும் மின் விளக்குகளை அணைத்ததாகவும் கூறினார்.

திலகலதாவின் திருட்டுக் கணவனான அமரேயை பொலிஸார் தேடிச் சென்றபோது அவன் இவ்வுலகை விட்டுச் சென்றிருந்தான். பல் வலிக்குக் சிகிச்சை செய்ய ஏற்றப்பட்ட ஊசி மருந்து விஷமாகியதால் அவன் இறந்தான். தலைமறைவாகியிருந்த திலகலதா மஹியங்களை பெரஹெர உற்சவத்தில் வியாபாரம் செய்துகொண்டிருக்கையில் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டால். அனைவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.