புத் 65 இல. 40

சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22

SUNDAY OCTOBER 06 2013

 

 
ஜனாதிபதி மீது அதீத நம்பிக்கை, மக்களின் நன்மை, காலத்தின்தேவை:

ஜனாதிபதி மீது அதீத நம்பிக்கை, மக்களின் நன்மை, காலத்தின்தேவை:

மத்திய மாகாணத்தில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு அரசாங்கத்திற்கே

(எஸ்.தியாகு)

மத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப் புடன் இணைந்து ஆதரவளித்துச் செயற்படத் தாம் தீர்மானித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணி அறிவித் துள்ளது. மக்களின் நன்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் ஜனா திபதி மீது வைத்துள்ள நம்பிக்கை ஆகியவற்றினாலேயே ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“மத்திய மாகாண சபை தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளோம் இதன் மூலம் கட்சி ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வதா என்ற தீர்மானத்தை எடுக்க முடியும்.

அதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளார்கள். ஆனால் மலையக மக்களின் நம்மை கருதியும் காலத்தின் தேவை கருதியும் அரசாங்கத்துடன் இணைந்து மத்திய மாகாண சபையில் செயல்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. “நான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு வருடத்தில் 121 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களை எமது மக்களுக்காக முன்னெடுத்துள்ளேன்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.