புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 

சினிபஜார் கேள்வி - பதில்

எஸ். ஜெகதீஸ், வென்னப்புவ,

கே. நீர்ப்பறவை என்ற படத்திற்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றினால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாமே! அந்தப் பாடலின் வரிகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா வர்ஷினி?

ப. என்னுயிரை அர்ப்பணம் செய்தேன்

உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்

சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்....!

என்று வைரமுத்து எழுதியிருப்பதுதான் சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. இதனால் கிறிஸ்துவ அமைப்பினர் சிலர் வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித் துள்ளனர். இதனால் வைரமுத்துவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

சஹானா பாரூக். திஹாரி.

கே. இப்போது மெட்டுக்கு பாட்டு எழுதுகிறார்களா? பாட்டுக்கு மெட்டுப் போடுகிறார்களா?

ப. ஐயையோ அந்தக்காலமெல்லாம் மலையேறிவிட்டது சஹானா. இப்போது ‘துட்டுக்குத்’ தான் பாட்டெழுதுகிறார்கள்.

பரிமளா, வவுனியா.

கே. ‘எங்கள் தங்கம்’ படத்திலே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு காலாட்சேபனைக் காட்சியில் மொட்டை அடிச்சி குடுமி வெச்சிருப்பாரே உண்மையில் அவர் அந்தக் காட்சியில் மொட்டை அடிக்கவில்லை என்று எனது அப்பா சொல்லுகிறாரே இது எப்படி சாத்தியமாகும்?

ப. உங்கள் அப்பா கூறுவது உண்மைதான். அவ்வளவு தத்ரூபமாக மேக்கப் போட்டவர் யார் தெரியுமா? பிரபல இயக்குநர் பி.வாசுவின் தந்தை அந்தக்காலத்தில் இவர் மிகவும் புகழ்பெற்ற மேக்கப் மேனாக இருந்தார். இவரைப் பற்றி அவரது மகன் வாசு என்ற கூறுகிறார் என்று பார்ப்போம்.

“எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்.சிவாஜி எல்லோருக்கும் எங்க அப்பாதான் மேக்கப் போடுவாரு, என்.டி.ஆருக்கு எங்கப்பா பீதாம்பரம் கிருஷ்ணா, மேக்கப் போட்டாருன்னா அவர் கட்டில்ல படுக்க மாட்டாரு. பாயில்தான் படுப்பாரு. மாமிசம் சாப்பிட மாட்டாரு”

இயேசுநாதராக எம்.ஜி.ஆருக்கு போட்டபோது, தன் உருவத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். நூறு வருஷம் போனாலும் என்னை கடவுளாகவே கும்பிடுவார்கள் போல இருக்கேன்னு இயேசுவாக நடிக்க மறுத்துட்டாரு. ‘பாதாள வைரவி’ படத்தில் ரங்காராவுக்கு கிழவர் வேஷம் எப்படிப் போட்டார் தெரியுமா? பலூன்களை வெட்டி கம் போட்டு முகத்தில் ஒட்டி விரல்களாலே அதை சுருக்கி விட்டு காய்ந்த பின் அதன்மேலே மேக்கப் போடுவாராம். இப்படிப்பட்ட மேக்கப் போடுறதுக்கு இன்னைக்கு வெளிநாடுகளுக்குப் போறாங்க.

எம்.எஸ்.ஜோனிராஜன், சிலாபம்.

கே. இந்த வாரம் பரபரப்பான கிசு கிசு என்ன?

ப. ‘யா’ நடிகருக்கும் ‘ரா’ நடிக்கைக்கும் நட்பு ரொம்பவும் இறுக்கமாகிவிட்டதாம். சென்னை வந்தால் ‘யா’ வின் வீட்டில்தான் தங்குகிறார் ‘ரா’. சமீபத்தில் ஒரு படத்தின் கதை சொல்ல வந்தவரிடம் முதலில் ஹீரோ யாருன்னு சொல்லுங்க அப்புறம் கதை கேக்கிறேன்னு சொல்லியிருக்கார். ‘யா’ தான் நடிக்கப் போகிறார் என்றதும் கதையே சொல்ல வேண்டாம் நான் நடிக்கிறேன் என்று பச்சைக் கொடி காட்டி அனுப்பியிருக்கிறார்.

ஆர். பார்வதி, நுவரெலியா

கே. எங்கள் ‘தல’ அஜித் நடிக்கப் போகும் அடுத்த படம் என்ன வர்ஷினி?

ப. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல நடிக்கப்போகும் அடுத்த படம் வெற்றி கொண்டான்.

எஸ்.எம்.முபாரக் மாவனல்ல.

கே. தமிழ்ப் படங்களில் அடக்கி வாசிக்கும் தமன்னா ராகவா லாரன்ஸ் இயக்க இருக்கும் தெலுங்குப் படமான ‘ரிபெல்’ படத்தில் தாராளமாக க்ளாமர் காட்டியிருக்கிறாராமே உண்மையா வர் ஷினி?

ப. உண்மைதான். இதனால். தென்னிந்திய சினிமா நடிகைகளின் வயிற்றில் புளியையும், ரசிகர்களின் கண்களில் பாலையும் வார்த்திருக்கிறது. இதே சூட்டோடு தமன்னா ரமணா ரீமேக் மூலம் பொலிவுட்டிலும் கால்வைக்கப் போகிறார். என்ன ஆகுமோ என்று நடுங்கும் தொடையை கால் மேல் கால் போட்டு மறைக்கிறார்கள் பொலிவுட் நாயகிகள்.

சினிபஜார் கேள்வி - பதில்

சினிமா சம்பந்தமான உங்கள் சந்தேகங்களை வர்ஷினியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் கேள்விகளைத் தபால் அட்டையில் தெளிவாக எழுதி கீழ்வரும் விலாசத்திற்கு அனு ப்பி வையுங்கள்.

சினிபஜார்

கேள்வி - பதில்

தினகரன் வாரமஞ்சரி

லேக்ஹவுஸ்

கொழும்பு 10.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.