புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

750 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் இலங்கையில் சேவையை ஆரம்பித்துள்ள ஒரியன்ட் இன்'{ரன்ஸ்

750 மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் இலங்கையில் சேவையை ஆரம்பித்துள்ள ஒரியன்ட் இன்'{ரன்ஸ்

அரபு ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ் PSC யின் முழு உரித்துடைய கிளையான ஒரியன் இன்ஷ¤ரன்ஸ், உத்தியோகபூர்வமாகக் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு, சினமன் லேக்சைட் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.

Al-Futtaim Group UAE இன் உபதலைவர் Omer Al-Futtaim அரபு ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ், சிரேஷ்ட முகாமைத்துவப் பணிப்பாளர் Omer Elamin, ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ் இலங்கையின் உப தலைவர/AMW தலைவருமானதேசபந்து திலக் டீ சொய்சா மற்றும் ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ் இலங்கையின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி தீப்தி லொக்கு ஆராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை காப்புறுதி சபையின் அனுமதி பெற்ற ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ் நிறுவனம், மோட்டர், கடல், சொத்து, கடன், மருத்துவ மற்றும் பொது காப்புறுதி துறையின் கீழ் வரும் அனைத்து விடயங்களும் உள்ளடங்கலாக பொது காப்புறுதித் துறையில் செயற்படும்.

ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸின் சகநிறுவனமாக உள்ளூர் மோட்டார் வாகனங்களின் விற்பனையில் முன்னணியில் திகழும் அசோஷியேட் மோட்டர்வேஸ் காணப்படுகின்றது. மோட்டார் வாகன தொழில் துறையில் 60 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தினை கொண்டிருப்பதன் மூலம், மோட்டார் வாகனத் துறை மற்றும் வலையமைப்புக் கடைகளின் மூலமான உள்ளூர் புரிந்துணர்வானது, மோட்டார் வாகன காப்புறுதி தொடர்பில் உள்ளூர் சந்தையில் புரிந்துணர்வினை ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தினை தலைமையகமாகக் கொண்ட அரபு ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாரிய மற்றும் திடமான காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இதன் மொத்த எழுதப்பட்ட வெகுமதி தளம் 350 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை ரூபாவில் 42 மில்லியன்) அதிகமாகும். அரபு ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ் நிறுவனமானது Al-Futtaim Group UAE இன் ஒரு அங்கமாகும். Standard & Poor’s மற்றும் AM Best என்பவற்றில் ‘ஏ’ தரப்படுத்தலையும் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், டுபாயை தலைமையகமாகக் கொண்ட  Al-Futtaim Group  இன் உறுப்பினராக அரபு ஒரியன்ட் இன்ஷ¤ரன்ஸ் PSC உள்ளது.

வாகனங்கள், சில்லறை வியாபாரம், புதிய மூலோபாய வளர்ச்சி, நிதி சேவைகள், ரியல்எஸ்டேட் மற்றும் கட்டுமானம், இணைந்த முயற்சிகள் ஆகிய ஆறு செயற்பாட்டு சார்பிரிவுகளாக Al- Futtaim கட்டமைக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனமாக 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 30,000 இற்கும் மேற்பட்டவர்களை ஊழியர்களாகக் கொண்டு Al-Futtaim இயங்கி வருகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.