புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

ஷஎதிர்கால தொழில்துறை வாய்ப்பு பங்காளர்கள் 2012'' அங்குரார்ப்பணம்

ஷஎதிர்கால தொழில்துறை வாய்ப்பு பங்காளர்கள் 2012'' அங்குரார்ப்பணம்

‘இளைஞர், யுவதிகள் தொழிற்துறையில் காலடியெடுத்து வைக்கும் வேளையில் தகவல் தொழில்நுட்பம் அல்லது வியாபாரத் தொழிற்பாடுகள் வெளிச்சேவையமர்வு (BPO) தொழிற்துறைகளைத் தெரிவு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் பிரதான நோக்கத்தை எதிர்கால தொழிற்துறைகள் தளமேடையின் உந்து சக்தியுடன் முன்னெடுத்துச் செல்வதே எமது இலக்கு.

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபாரத் தொழிற்பாடுகள் வெளிச்சேவையமர்வு (BPO) தொழிற் துறைகளில் இணைந்து கொள்ளும் இளைஞர் - யுவதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதே எமது அபிலாஷை. அறிவுப் பொருளாதாரத்திற்கு இலங்கையை வழிநடாத்திச் செல்வதில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமான இலக்குடன் முதலிடத்தில் திகழும் தொழிற்துறையாக மாற வேண்டும் என்ற எமது தேசிய இலக்கை எட்டவும், 2015 ஆம் ஆண்டளவில் 100,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை அடையவும் ஏதுவாக இலங்கையை வழிநடாத்திச் செல்வதில் எமது முயற்சிகள் அனைத்தும் பங்களிப்பாற்றி வருகின்றன. தொழிற்துறையில் மனித வள மூலதனத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதே இவ்வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கான முக்கியமான முற்கூட்டிய ஒரு தேவையாக உள்ளது என்று SLASSCOM இன் தலைமை அதிகாரியான சுஜீவ தேவராஜா குறிப்பிட்டார்.

எதிர்கால தொழிற்துறை வாய்ப்புப் பங்காளர்கள் 2012 எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் அறிமுக நிகழ்வு அண்மையில் கொழும்பு 10 இலுள்ள டயலொக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே சுஜீவ தேவராஜா அவ்வாறு தெரிவித்தார். இலங்கை மென்பொருள் மற்றும் சேவை வழங்கல் நிறுவனங்களின் சங்கமானது SLASSCOM எதிர்கால தொழில்துறை வாய்ப்புகளை ஸ்திரப்படுத்தும் முகமாக மூலோபாயப் பங்காளர்களான தொழிற்பயிற்சி அதிகார சபை. வேர்டூஸா, Pearson. IFS. Zone 24/7 Millennium IT  யிஹி (லண்டன் பங்குச் சந்தையின் ஒரு பிரிவு). SHBC மற்றும் முதல் மூலப் பங்காளரான டயலொக் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ‘எதிர்கால தொழிற் துறை வாய்ப்பு பங்களார்’ நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.