புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

இலங்கை மருத்துவ சங்கத்துடன் கைகோர்க்கும் இன்டெல்

இலங்கை மருத்துவ சங்கத்துடன் கைகோர்க்கும் இன்டெல்

இலங்கை மருத்துவ சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற “சிறப்பான எதிர்காலத்திற்காக ஆரோக்கியமான ஒரு சமுதாயம்” என்ற முன்னெடுப்பிற்கு பங்களிப்பு வழங்கும் வகையிலே இன்ரெல் நிறுவனம் இலங்கை மருத்துவ சங்கத்துடன் கைகோர்த்துள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்துடன் இன்ரெல் ஏற்படுத்தியுள்ள கூட்டிணைப்புத் தொடர்பில் Intel Em LTD நிறுவனத்தின் இலங்கைக்கான தொடர்பாடல் அலுவலகத்தின் வியாபார முகாமையாளரான இந்திக டி சொய்சா கூறுகையில், ‘ஆசியாவிலேயே மிகவும் பழமைவாய்ந்த தேசிய மருத்தவ சங்கமான இலங்கை மருத்துவ சங்கத்துடன் கூட்டிணைப்பை ஏற்படுத்தியுள்ளமையையிட்டு நாம் மிகுந்த கெளரவம் அடைந்துள்ளோம். உலகெங்கிலும் சுகாதாரப் பாராமரிப்புத்துறையில் தொழில் நுட்பத்தின் மூலமான வாய்ப்புகள் மற்றும் அதன் அனுகூலங்கள் தொடர்பில் நாம் உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த கூட்டிணைப்பின் மூலமாக இலங்கையில் சுகாதாரப் பராமரிப்புத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதற்கு நாம் எண்ணியுள்ளோம்”. இன்ரெல் நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள உரிமத்தொகை அறவீடற்ற ஒரு திறந்த மூலநிரல் தொழில்நுட்பத் தளமேடையை உபயோகித்து தொழிற்படையின் 100,000 பேருக்கு கல்வி, பயிற்சி மற்றும் மதிப்பீட்டை வழங்கும் நோக்குடன் அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது. 2015 ஆம் ஆண்டளவில் தொழிற்படையின் 100,000 உறுப்பினர்களுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் பயிற்சி மற்றும் சான்றளிப்பு மற்றும் 2015 ஆம் ஆண்டளவில் சுகாதாரத்துறை திட்டவியலாளர்கள் சுகாதார நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதை அவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக 5,000 பாடசாலைச் சிறார்களுக்கு ஒரு அடிப்படை இலத்திரனியல் சுகாதாரப் பதிவு முறையை அமுல்படுத்தல் ஆகியனவும் அதில் உள்ளடங்கியுள்ளன.

தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்திய இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான பேராசிரியர் வஜிர எச். டபிள்யூ. திஸாநாயக்க “ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதாரத்துறை எவ்வளவோ அபிவிருத்தி கண்டுள்ள போதிலும், இலங்கை சுகாதாரத்துறை தொழில்நுட்பத்தின் மூலமான பயன்களை சமீபத்திலிருந்தே அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளது . இன்ரெல் நிறுவகத்துடன் கைகோர்த்துள்ளமையையிட்டு மகிழ்கின்றோம் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.