புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
தொப்பி அணிந்த நிலையில் யிவி ஆட்பதிவு திணைக்களம் அனுமதி

அரபுக் கல்லூரி மாணவர்கள், உலமாக்கள்;

தொப்பி அணிந்த நிலையில் யிவி ஆட்பதிவு திணைக்களம் அனுமதி

ஆணையாளர் ஜகத் பி. விஜயவீர தகவல்

முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜயவீர தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்தை அடுத்து தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையிலுள்ள புகைப்படங்களைக் கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன. இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சரவையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் போன்றோர் தொப்பி அணிவது தொடர்பில் தெளிவுபடுத்திக் கூறியதையடுத்து இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க தொப்பி அணிந்த புகைப்படத்துடன் அரபுக் கல்லூரி மாணவர்கள், உலமாக்கள் மாத்திரம் தேசிய அடையாள அட்டைக்கென விண்ணப்பிக்க முடியும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் பி. விஜயவீர தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.