புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 
வடக்கு மக்களிடையே விழிப்புணர்வு; யாழ். தினகரனுக்கு பாராளுமன்றில் பாராட்டு

அபிவிருத்தியை எடுத்தியம்பிய விசேட அனுபந்தம்

வடக்கு மக்களிடையே விழிப்புணர்வு; யாழ். தினகரனுக்கு பாராளுமன்றில் பாராட்டு

திருக்குறள் மாநாட்டிற்கும் அஸ்வர் ணி.ஜி வாழ்த்து;

அரசாங்கத்தினால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக யாழ். தினகரன் பத்திரிகையுடன் வெளியாகிய விசேட அனுபந்தம் அப்பகுதி மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் மக்கள் பணியை தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறிய யாழ். தினகரனுக்கு இந்த மக்கள் சபையான பாராளு மன்றத்தில் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் வெள்ளியன்று மாலை தெரிவித்தார்.

அந்தவகையில் சுமார் இருபதாயிரம் மேலதிக விசேட பிரதிகளை யாழ். தினகரனுடன் அச் சிட்டு அதன்மூலம் மூன்றரை இலட்ச ரூபாவை மேலதிகமாகவும் நிறுவனத்திற்குப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்த இச்சபையில் பாராட்டுவதில் பெருமையடைகிறேன் என்றும் அஸ்வர் எம். பி. தெரிவித்துள்ளார்.

அஸ்வர் எம். பி. பாராளுமன்றத்தில் யாழ். தினகரன் தொடர்பாக உரையாற்றுகையில், யாழ். தினகரன் பத்திரிகையையும், வடக்கு அபிவிருத்தி தொடர்பாக யாழ். தினகரன் வெளியிட்ட விசேட அனுபந்தத்தையும் கையில் உயர்த்திக் காட்டியதுடன் சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் பிரதிகளைக் கொடுத்தும் உள்ளார்.

இதேவேளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் திருக்குறள் மாநாட்டிற்கும் அஸ்வர் எம். பி. பாராளுமன்றத்தில் வெள்ளியன்று பாராட்டுத் தெரிவித்தார்.

நாட்டில் அமைதியான சமாதானச் சூழல் நிலவுவதால் ஆலய திருவிழாக்கள், பள்ளிவாசல் கந்தூரி வைபவங்கள், இலக்கியக் கூட்டங்கள் என்பன சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதனை ஏற்படுத்தித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குத் தமிழ் பேசும் மக்கள் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அஸ்வர் எம். பி. சபையில் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.