புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லை/ப்

முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லை/ப்

இலங்கை காப்புறுதித் துறையை ஒழுங்கமைக்கும், இலங்கை காப்புறுதி சபை (IBSL) ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை வகிக்கும் செலி ங்கோ லைஃப் நிறுவனத்தை 2010ன் நீண்ட கால காப்புறுதித் துறைப் பிரிவில் தலைமை தாங்கும் நிறுவ னமாக உத்தியோகபூர்வமாக உறுதி செய்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட அதன் வருடாந்த அறிக்கையில் (IBSL)  செலிங்கோ லைஃப்பை முதல் இடத்துக்கு தெரிவு செய்து ள்ளது. மொத்த பதிவு செய்யப்பட்ட சந்தாப் பெறுமதிகளின் சந்தைப் பங் கின் அடிப்படையில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

நீண்ட கால வர்த்த கத்தின் அடிப்படையில் 14 கம்பனிக ளுள், 2010ம் ஆண்டில், ஒட்டுமொத்த மாக 31.151 பில்லியன் ரூபா சந்தா வருமானத்தில் 8.786 பில்லியன் ரூபாவை செலி ங்கோ லைஃப் கொண்டு ள்ளது.

“நீண்ட கால காப்புறுதி வர்த்தகப் பிரிவில் மொத்த பதிவு செய்யப்பட்ட சந்தாப் பெறுமதிகளின் அடிப்படையில், கடந்த ஆண்டுகளைப் போலவே சந்தையில் 28.21 சதவீதத் தைப் பெற்று செலிங்கோ தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது” என (IBSL) இன் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

2010 டிசம்பர் 31ல் முடிவடைந்த ஆண்டானது செலிங்கோ லைஃப் ஏழாவது ஆண்டாக தொடர்ந்து சந்தையில் தலைமை தாங்கும் நிறுவ னமாகத் திகழும் ஆண்டாகும். இந்தக் காலப் பகுதியில் கம்பனி 157,682 புதிய ஆயுள் காப்புறுதிகளை விற்பனை செய்துள்ளது. ஏனைய ஆயுள் காப்புறு திக் கம்பனிகளாலும் விற்பனை செய்யப் பட்ட 503,543 காப்புறுதிகளோடு ஒப்பிடு கையில் இது மூன்றில் ஒரு பங்காகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.