புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

மதர் ஸ்ரீலங்காவினூடாக நாட்டுப்பற்றை வளர்க்கும் திட்டங்கள் அமுல்

மதர் ஸ்ரீலங்காவினூடாக நாட்டுப்பற்றை வளர்க்கும் திட்டங்கள் அமுல்

இலங்கையர்கள் தமது தாய்நாட்டின் மீது கொண்டுள்ள நாட்டுப்பற்றை அதிக ரிக்கும் விதத்தில் மதர் ஸ்ரீலங்கா என்ற இலாப நோக்கற்ற நிறுவனம் அண்மை யில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தனது தூதுவர்களாக இலங்கையின் முன்னணி வணிகத் தலைவர்களையும் தொழில்சார் நிபுணர்களையும் நியமித்துள்ளது. தூது வர்களாக செயற்படவுள்ள தொழில் நிபுணர்களும், கல்வி மற்றும் வணிகத் துறையைச் சார்ந்த தலைவர்களும் தமது தாய்நாட்டின் மீதான பற்றுறுதியையும் அன்பையும் தமது நடவடிக்கைகள் ஊடாகப் பரப்புவார்கள் என்று நம்பப் படுகின்றது. அதுமட்டுமன்றி இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு காரண ங்கள் நிமித்தம் வெளிநாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் சிறந்த சர்வதேச நட்புறவைக் கொண்டி ருப்பதனால் இலங்கையைப் பற்றிய உண்மையான செய்திகளை உலகறியச் செய்வதற்கு ஏதுவாய் இருக்கும் என்றும் இலங்கை பற்றிய தவறான அபிப்பி ராயங்களை இல்லாமல் செய்வதற்கு இது அவசியமானது என்றும் எதிர்பார்க் கப்படுகிறது.

முற்றிலும் தனியார் நிதியுதவியில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் மதர் ஸ்ரீலங்காவின் முன்னாள் தூதுவரான நீதிபதி கிறிஸ்தோபர் ஜி.வீரமந்திரி தமது உரையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தூதுவர்களின் முக்கிய பொறுப்பு தொடர்பில் வலியுறுத்தினார். சிரேஷ்ட அமைச்சரான டாக்டர் சரத் அமுனுகம எவ்வாறு தமது தாய்நாட்டின் நற்பெய ரையும், நல்லபிப்பிராயத்தையும் இவர் கள் கட்டியெழுப்ப முடியும் என்றும், சர்வதேசத்தின் பார்வையில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என் றும் தனது பிரதம உரையில் விளக்க மளித்தார். மதர் ஸ்ரீலங்கா அறங்காவல ரான லலித் வீரதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மதர் ஸ்ரீலங்கா ஆரம்பிக்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை எட்டிய வளர்ச்சியை விபரிக்கும் கைநூல் ஒன்றும் இங்கு வெளியிடப் பட்டது.

மதர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் 30 வருட காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் மக்களின் நம்பிக்கையையும் கனவுகளை யும் சிதைத்து விடாமல் இருப்பதற்கு உதவிய மக்களின் மனோ தைரியத்தை யும் நெகிழ்வுத் தன்மையையும் இந்நூல் விபரிக்கின்றது. இதன் முதல் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.