புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

NIBM இன் 13ஆவது பட்டமளிப்பு விழர் 252 பேர் பட்டம் பெற்றனர்

NIBM இன் 13ஆவது பட்டமளிப்பு விழர் 252 பேர் பட்டம் பெற்றனர்

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும, முகாமைத்துவ பிரிவில் இளமாணிப்பட்டம் பெற்ற கே. சி. வெலிஹிந்த கலாநிதி ஹ¤பிராபி மற்றும் முகாமைத் துவத் தகவல் திட்டப் பிரிவில் சிறந்த மாணவியாக தெரிவான டி. ஜி. ஆர். தில் ருக்சி ஆகியோரை படத்தில் காணலாம்.

தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்வியகத்தின் NIBM முகாமைத்துவ தகவல் திட்ட MIS பிரிவின் 13ஆவது வேதியல் துறைகளுக்கான பட்டமளிப்பு வைப வம் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமைத்துவத்தில் கொழும்பு வோட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகத்தின் ஓரங்கமான டப்ளின் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் 252 பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்பட்டதுடன், அதில் 12 பட்டதாரிகளுக்கு முதல் வகுப்பில் சித்தியடைந்தமைக்கான கெளரவப் பட்டங்களும், 151 பட்டதாரிகளுக்கு இரண்டாம் வகுப்பில் முதலாம் பிரிவில் சித்தியடைந்த மைக்கான கெளரவ பட்டங்களும், 89 பட்டதாரிகளுக்கு இர ண்டாம் வகுப்பில் இரண்டாம் பிரிவில் சித்தியத்திடைந்தமைக்கான கெளரவப் பட்டங்களும் வழங்கப்பட்டிருந்தன.

இந்த பட்டமளிப்பு வைபவம் முகாமைத்துவ தகவல் திட்ட கற்கைகள், முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் போன்ற வேதியல் துறைகளில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிகழ்வில் சிறந்த மாணவராக முகாமைத்தவ தகவல் திட்ட பிரிவின் டி. ஜி. ஆர். திர்ருக்சி மற்றும் முகாமைத்துவம் மற்றும் மனிதவள முகா மைத்துவ பிரிவுகளில் கே. சி. வலிஹிந்த ஆகியோர் தெரிவு செய்யப் பட்டிருந்தனர். அயர்லாந்தின் தேசிய பல்கலைக்கழகம் 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், இந்த பல்கலைக்கழகமானது அயர்லாந்தில் காணப்படும் நான்கு பிரதான பல்கலைக்கழகங்களின் சம்மேளனமாகவும் திகழ்கின்றது. இதில் 20000 மாணவர்களும் 2000 ஊழியர்களும் பணியாற்றுகின்மை குறிப்பிடத்தக்கது. இங்கு பெருமளவு கற்கைநெறிகளின் நலன் கருதி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.