புத் 64 இல. 30

கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21

SUNDAY JULY 24,  2011

 

கேம்பிரிஜpல் பட்ட, மேற்படிப்பு தகைமைகளை அறிமுகப்படுத்தியுள்ள

கேம்பிரிஜpல் பட்ட, மேற்படிப்பு தகைமைகளை அறிமுகப்படுத்தியுள்ள

Cambridge Ruskin International College

Cambridge Ruskin International College (CRIC) தனது பல் வகைப்பட்ட பட்டப்படிப்புக்கள் மற்றும் மேற்பட்டப் படிப்புக்களை இலங்கையி லுள்ள மாணவர்கள் மத்தியிலும் அறி முகம் செய்துள்ளது. இலங்கையிலுள்ள ஒரு சர்வதேச தொழில் வாழ்க்கை வழி காட்டல் மற்றும் மாணவர் தகுதிகாண் சேவை நிலையமான Aspiration Education (AE)  உடன் நிறுவனம் பங்குடைமையொன்றை ஏற்படுத்தி ஐக்கிய இராச்சியத்தின் கேம்பிரிட்ஜில் கற்கைகளை மேற்கொள்வதற்கு இலங் கையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி விசாக்களை வழங்குகின்றது. கணக்கீடு மற்றும் நிதியியல், உயிர் மருத்துவ விஞ்ஞானம், வர்த்தக முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல், சட்டம் மற்றும் குடிசார் மற்றும் எந்திரவியல் பொறியியல் ஆகிய பல்வேறு கற் கைத்துறைகளில் வர்த்தகத்துறை மாண வர்களுக்கான முதலாவது வருட நுழைவுக் கற்கை நெறிகளையும் வர்த் தகம், கணினி விஞ்ஞானம் மற்றும் சட்டம் ஆகிய கற்கைத் துறைகளில் மேற்பட்டப் படிப்பு சற்கைநெறிகளை யும் இந்த உயர் கல்வி நிறுவனம் வழங்குகிறது.

பல்கலைக்கழகத்தின் ஆங்கிலமொழி நிலையத்தினூடாக ஆங்கில மொழி கல்வி வகுப்புக்களும் ஏற்பாடு செய்யப் படுவதுடன், ஒவ்வொரு கல்வியாண்டி லும் அவ்வாறான ஆறு பிரிவுகள் ஆரம்பிக்கப்படுகின்றன. தங்குமிட உதவி, காப்புறுதி பதிவு, வங்கிக் கணக்கு களை ஆரம்பித்தல், மருத்துவரிடம் பதிவு போன்ற அனைத்துத் துறைகளி லும் மாணவர்களுக்கு உதவுவதில் இந்த உயர் கல்வி நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயற்பட்டு வருகின்றது.

இலங்கையில் அனேகமான மாணவர்கள் உள்நாட்டு அல்லது கேம்பிரிட்ஜ் சாதாரண/ உயர்தர கல்வியை பூர்த்தி செய்யும் நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் தமது மேற் படிப்பைத் தொடருவது அவர்களுக்கு பொருத்தமான ஒரு தெரிவாக அமைந் துள்ளதுடன், அதன் மூலமாக அவர்கள் அடிப்படை அல்லது முதலாவது வருட பட்டப்படிப்பு நுழைவிற்காக தங்களை ஆயத்தம் செய்துகொள்ள முடிகின்றது. Anglia Ruskin பல்கலைக்கழகம் மற்றும் CRIC ஆகியவற்றிற்கிடையிலான பங்குடமையானது மாணவர்கள் பல்வேறு கட்டங்களினூடாக கற்கைமட்டத்தில் மிக இலகுவாக மேற்சென்று Anglia Ruskin பல்கலைக்கழகத்தில் இறுதியாக கலைமாணி அல்லது முதுமாணிப் பட்டமொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் Anglia Ruskin பல்கலை க்கழக பட்டமொன்றைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகின்றது. Anglia Ruskin  பல் கலைக்கழகமானது கேம்பிரிஜ் மற்றும் Chelmsford ஆகிய இரு பல்கலைக் கழகங்களிலும் அமைந்துள்ளமை யால் CRIC மாணவர்கள் Anglia Ruskin  பல்கலைக்கழகத்தின் வசதிகள் அனைத் தையும் மற்றும் இரு பல்கலைக்கழகங் களிலும் தங்குமிட வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் அனுகூலத்தைக் கொண்டுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.