புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

ப+மியின் வேரில் நீயும் உலகும்!

ப+மியின் வேரில் நீயும் உலகும்!

உன் கண்ணீர் பார்த்து
துயரமடைகிறது தெய்வம்

உன் சிறகுகளை
கத்தரிக்க நினைப்பவர்கள்
நினைப்பதில்லை
உன் கால்களும்
சிறகுகள் தானென்று!

சீதன வேரில் நிற்கின்ற
மரத்தில்
பூக்கள் கனிகள்
எதிர்பார்த்து ஏமாறாதே
அது பூக்கும்
முட்களை மட்டுந்தான்!

விலை கொடுத்து
வாங்குகின்ற அடிமையை
எஜமானாக்கி விட்டு
அடிமையாகிறாய் நீ!

என்று
நீ
அன்னமாகின்றாயோ
அன்றுதான்
புரியும் உனக்கு
பாலெது
நீரெது என்று!

நீ
இல்லாவிட்டால்
உலகம்
நிரம்பிவிடும்
அழுக்குகள் அவலங்களால்!

தென்றல் வீசும்
உன்னைத் தழுவுவதற்கு
காற்றில்லாத கிராமத்திற்கு
நீ
சென்றாலும்!

ஏவாளைக் கண்டதிலிருந்து
பூமி
வத்துக் கொண்டது
உன் புன்னகை
நகல்தான்
பூக்களென்று!

மலர்
நிலா
தேன் என
உன்னை ஒப்பிடும்
பேனாக்களிடம் சொல்
இன்னும்
ஏமாற்ற வேண்டாமென்று!

வாசல் திறப்பதற்கு
சாவியா தேடுகிறாய்
நீதான் சாவி!

பூமி போல்
பொறுமை
நீ என்கிறார்கள்
மேலும்
மேலும்
ட்டலாம் என்றுதானே!

பூமி சுழலாது
காற்றும் வீசாது
நீ
ஒருநாள்
வேலைநிறுத்தம் செய்தால்!

பூ என்றுதான்
வட்டமிடுகிறது
வண்டு
மறைத்து வைக்காதே
முட்களை!

முதல்
அதிசயம் நீ
படைத்த பிரம்மனே
வியத்து போன
அற்புதம் நீ!

நிலா
சூரியன்
விண்மீன்கள்
வராதநாள் போல
நீ இல்லாத
உலகம்!

வெற்றிகளுக்குப் பின்னால்
நீயென்கிறார்கள்
நீயேதான் வெற்றி!

உன் முற்றத்திலேயே
முத்துக்களை
விளைச்சலாக்கக் கூடியவள்
நீ!

காட்டுத் தீ கூட
அடங்கி
அணைந்து போகும்
உன்
ஒரு துளிக் கண்ணீர்
கண்டால்!

கோடி கோடி
இசைக் கருவிகள்
கண்டுபிடித்தாலும்
போதாது
உன் குணங்கள் புகழ்ந்து
இசைக்க!

புதிதாகிக் கொண்டிருக்கிறது
உலகம்
ஏழாம் அறிவு
நீயென்றால்

பாடினால்
குயில்
ஆடினால்
மயிலாம்
இப்படி
அஃறிணைகளால்
அவமதிப்பது புரிகிறதா?

மென்மையானவள்
என்று
சொல்ல விடாதே
கடினமான பிரசவத்தை
இலகுவாக
நிகழ்த்துபவள் நீ!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.