புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

அரசின் அமோக வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

நீண்ட காலத்திற்குப்பின் அறுதிப் பெரும்பான்மை

நீண்ட காலத்திற்குப் பின்னர் அறுதிப் பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைவதும் பல புதிய முகங்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருப்பதும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துடனான பாராளுமன்றத்தின் விசேட அம்சங்களாக உள்ளன. நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தேர்தல் முறையின் கீழ் அறுதிப் பெரும் பான்மையுடனான அரசாங்கம் அமையவுள்ளது. கடந்த 8ம் திகதி நடந்த தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலுமிருந்து பல புதுமுகங்கள் தெரிவாகியிருக்கிறார்கள்.

விவரம் »

 

கொழும்பு மாவட்டத்தில் விமல், ரணிலுக்கு அதிகூடிய வாக்குகள்:

போகொல்லாகம, மிலிந்த, இராதாகிருஷ்ணன் தோல்வி; பெளஸி, லொக்குகே தெரிவு

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 07 உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர். அதேநேரம், ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மிகக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். அவர் 2,80,672 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்திற்குப் புதிய முகமாக துமிந்த சில்வா 146,336 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விவரம் »

 

Advertisements______________________

Navayugaya

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk

   TRC

www.defence.lk    


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.