புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

ஜே.வி.பி தலைவர்களுக்கு

ஜே.வி.பி தலைவர்களுக்கு

எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இப்படித் தோல்வி கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் மக்கள் எதிர்பார்த்தார்கள். உங்கள் பாராளுமன்ற அரசியல் ஒரு உறுப்பினருடன் ஆரம்பித்தது. பின்னர் 10 ஆகவும் அதன் பின் 16 ஆகவும் வளர்ந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு 39 பேரைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தீர்கள். இப்போது இப்படி ஒரு நிலை வந்திருப்பதையிட்டு நிதானமாகச் சிந்திப்பீர்களேயானால் உங்கள் தவறு உங்களுக்குப் புரியும்.

மேதின ஊர்வலங்களில் கார்ள் மாக்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றோரின் உருவப் படங்களை உயரத் தூக்கிச் செல்வீர்கள். உங்கள் ஊர்வலங்களில் சிவப்புக் கொடி படபடத்துப் பறக்கும். இவற்றையெல்லாம் பார்த்து, இலங்கையில் புதிய இடதுசாரி அலையொன்று வீசப் போகின்றது என்று நான் ஒரு காலத்தில் நினைத்ததுண்டு. கொஞ்சக் காலம் சென்ற பின்னர்தான் மாக்சிஸ மூலவர்களின் படங்களும் சிவப்புக் கொடிகளும் வெறும் ‘புலுடா’ என்பது விளங்கியது.

சிறுபான்மையின மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை மாக்சியத்தைப் போல வேறெந்த அரசியல் கோட்பாடும் உத்தரவாதப் படுத்தவில்லை. ஆனால் நீங்கள் மாக்சிஸ்டுகள் என்று கூறிக் கொண்டு அந்த உரிமைகளை மதிக்க மறுக்கின்aர்கள். அதிகாரப் பகிர்வை எதிர்க்கின்aர்கள். பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதைக் கூட எதிர்க்கின்aர்கள்.

உங்களுடைய பாராளுமன்ற மோகம்தான் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்று சிலர் கூறுவதில் உண்மை இரு ப்பது போலவே தெரிகின்றது. சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே இந்த நிலை ப்பாட்டை எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிற§ன். இந்த வாக்குகளுக்காகச் சிஹல உருமயவுக்கும் உங்களுக்குமி டையே போட்டி இருப்பதாக ஒரு கதை உண்டு.

ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு நீங்கள் எடுத்த முடிவு உங்கள் மட்டத்தில் சரியானதுதான். ஏனெ ன்றால் அவரும் ஒரு சிங்களக் கடுங் கோட்பாட்டாளர்தானே. ஆனால், பொன்சேகாவை ஆதரிப்பதற்காக யூ. என்.பியுடன் கைகோர்த்ததை எப்படித்தான் நியாயப்படுத்துவீர்களோ தெரியாது. இந்த விடயத்தில் நீங்கள் யூ.என்.பியைப் பயன்படுத்தினீர்களா அல்லது யூ.என்.பி. உங்களைப் பயன்படுத்தியதா என்பது பலருக்குப் புரியாத புதிர். பாராளுமன்றத் தேர்தலில் யூ.என்.பி உங்களை அம்போ என்று கைவிட்டதிலிருந்து யூ.என்.பிதான் உங்களைப் பயன்படுத்தியது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதாகப் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது அடிக்கடி கூறினீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் உங்களுடனும் சேர்ந்து அரசாங்கம் அமைக்கப் போவதாக ரணில் விக்கிரமசிங்ஹ தனது பிரசாரத்தின் போது கூறினார். நீங்கள் கூறிய தேசிய அரசாங்கமும் ரணில் கூறிய கூட்டரசாங்கமும் ஒன்று தானா என்பது விளங்கவில்லை. எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசாங்கம் அமைப்பதற்கு உங்கள் கட்சியும் தயாராகவே இருந்ததென்பது மாத்திரம் விளங்குகின்றது. அது உங்களுடைய சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டம்.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் போதுமான தீர்வல்ல என்று கூறித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதை நிராகரிக்கின்றது. பதின்மூன்றாவது திருத்தம் ‘அளவுக்கதிகமான’ அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது என்பது உங்கள் நிலைப்பாடு. அதனால் தான் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நீங்கள் கூறுகின்aர்கள். இந்த நிலையில் நீங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து கூட்டரசாங்கமோ அல்லது தேசிய அரசாங்கமோ எப்படி அமைக்க முடியும்? இது சந்தர்ப்பவாதம் இல்லையா?

சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் உங்களைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். தேசிய ரீதியான நிலைப்பாட்டை எடுப்பது தான் இப்போது உங்களுக்குள்ள ஒரேயொரு வழி, முதலில் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வைப் பொறுத்தவரையில் சரியான நிலைப்பாட்டுக்கு வாருங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.