புத் 63 இல. 16

விரோதி வருடம் பங்குனி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1431 ர. ஆகிர் பிறை 25

SUNDAY APRIL 11, 2010

 
.

சர்வதேச புகைப்பட விருதில் தங்கம் வென்ற பிரியங்கர கமகே

சர்வதேச புகைப்பட விருதில் தங்கம் வென்ற பிரியங்கர கமகே

வருடாந்த அடிப்படையில் FIAP (புகைப் படவியல் கலைக்கான சர்வதேச அமையம்) ஏற்பாடு செய்யும் புகைப்படவியலுக்கான உலகின் முன்னணிப் போட்டிகளுள் ஒன்றான புகைப்படவியலுக்கான Al Thani விருதுகள் 2009 இல் வர்ணப் புகைப்படவியல் பிரிவில் பிரியங்கர கமகே தங்கம் வென்றுள்ளார்.

முழுப் போட்டியிலுமே தென் கிழக்காசியப் பிராந்தியத்திலிருந்து தங்கவிருதினை வென்று கொண்ட ஒரேயொரு போட்டியாளரான கமகே தமது வெற்றி குறித்து குறிப்பிடுகையில், ‘நான் பாரம்பரியமாக திருமண நிகழ்வுகளைப் புகைப் படமெடுக்கும் ஒருவர் என்றும் ஆனால் இணையத் தளம் மூலமாகவும் உள்ளூர் புகைப்படவியல் சமுகங்கள் மூலமாகவும் போட்டி தொடர்பாக அறிந்து கொண்டதன் பிரகாரம் இந்த வருடம் முதற் தடவையாக இப் போட்டியிலே பங்கு பற்றுவதற்குத தீர்மானித்ததாக சொன்னார்.

இவ் வருடத்திற்கான போட்டியில் 14,000 கும் மேற்பட்ட நுழைவுகளுக்கு மத்தியிலே இந்த விருதினைப் பெற்று எனது நாட்டிற்கும், தொழிலுக்கும் கெளரவம் பெற்றுத் தந்துள்ளத னையிட்டு, நான் மிகவும் பூரிப்படைந்துள் ளேன். Kodak வழங்கிய ஆதரவிற்கும், வெற்றி பெறும் எண்ணத்தினை எனக்குள் ஊக்குவித்து தன்னம்பிக்கையினை ஏற்படுத்தியிருந்த அவர் களது முதற்தர உற்பத்திகளுக்காகவும் எனது உண்மையான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்கிறார் கமகே.

Kodak இலங்கைக்கான தொடர்பு அலுவ லகமானது 1996 ஆம் ஆண்டு முதல் தொழிற் பட்டு வருவதுடன், ஐக்கிய அமெரிக்காவி லுள்ள ஜோர்ஜ் ஈஸ்ட்மானால் நிறுவப்பட்ட தலைமை நிறுவனத்தின் கீழே அமையப் பெற்றுள்ள தெற்காசியக் கொத்தணியின் கீழுள்ள Kodak Singapore இனால் மேற் பார்வை செய்யப்பட்டு வருகின்றது. இலங்கை யிலே Kodak ஆனது 70 வருடங்களுக்கும் மேலாக தனது விநியோகத்தராகச் செயற்பட்டு வருகின்ற Cargills Ceylon குழுமத்தினது உறுப்பு நிறுவனமான Millers Ltd மூலமா கக் கிடைக்கப் பெற்று வருகின்றது என்று மில்லர்ஸ் நிறுவன முகாமையாளரான சாமுவேல் நேசகுமார் குறிப்பிடுகிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


 
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
2010 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.