ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
அரச ஊழியர்களுக்கான ரூ 10,000 கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கான ரூ 10,000 கொடுப்பனவு

அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவாக வழங்கப்படுகின்ற பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து அடிப்படை சம்பளத்தில் சேர்க்கவுள்ளதாகவும் அதன் பயன் ஓய்வூதியம் பெறுகின்ற போதும் கிடைக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அக்மீமன தலகஹவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

அக்மீமன ஐ. தே. க. பிரதான அமைப்பாளர் விஜேபால ஹெட்டிஆராச்சி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.தேர்தல் நடத்தப்படுகின்ற போது எமக்கு தெளிவான முடிவுகள் இரண்டு இருக்கும். ஒன்று வருமானத்தை அதிகரித்தல். மற்றையது வருமானத்தை குறைப்பது ஆகும். முன்னாள் ஜனாதிபதி காலியல் கூறினார் அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை 25,000 ரூபாவாக்குவேன் என்று. இன்று பயிற்சிபெறாத தொழிலாளியின் அடிப்படை சம்பளம் 11230 ரூபாவாகும்.

நாங்கள் முதல் கட்டத்தில் விசேட கொடுப்பனவாக பத்தாயிரம் ரூபா கொடுத்தோம். இந்த இரண்டையும் சேர்த்த 21730 ரூபா ஆகும். இந்த விசேட கொடுப்பனவை செப்டெம்பர் மாதத்திலிருந்து அடிப்படைச் சம்பளத்தில் சேர்ப்போம். ஓய்வூதியம் பெறும் போது இந்த நன்மை கிடைக்கும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி