ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

சிறையில் இறந்த கறுப்பின பெண் கைதாகும் வீடியோ வெளியானது

சிறையில் இறந்த கறுப்பின பெண் கைதாகும் வீடியோ வெளியானது

டெக்ஸாஸில் சிறை க்குள் இறந்த கறுப்பு இன பெண்ணின் மர ணம் குறித்து புலனா ய்வு செய்யும் அமெரி க்க பொலிஸ் விசார ணையாளர்கள், அவர் கைது செய்யப்பட்ட வீடியோவை வெளி யிட்டுள்ளனர்.

வீதியில் ஒரு வரி சையில் இருந்து அடு த்த வரிசைக்கு மாறும் போது சமிக்ஞை செய்ய தவறினார் என்பதற்காக சண் டிரா பிளண்ட் என்னும் பொலிஸாரால் நிறுத்தப்பட்டதை பொலிஸ் காரில் பொருத்தப்பட்டிருந்த கமெரா காட்டுகின்றது.

தன்னை ஏன் கைது செய்கிறீர்கள் என்று அவர் திரும்பத் திரும்ப கேட்டதை அடுத்து அங்கு போலிஸ் அதிகாரியுடனான வாக்குவாதம் திடீரென அதிகரித் தது.

பின்னர் இருவரும் கமெராவில் தெரியாத பகுதிக்கு நகர்ந்தனர். ஆனால், பின்னர் அவர்களது வாய்த்தர்க்கம், தள்ளுமுள்ளாக மாறியது கமெராவின் ஒளிப்பதிவில் கேட்கிறது.

ஒளிப்பதிவில் உள்ள பல தொடர்ச்சியற்ற இடைவெளிகள் அந்த வீடியோ எடிட் பண்ணப்பட்டுள்ளதை காண்பிக்கிறது.

சிறையில் மூன்று நாட்களின் பின்னர் பிளண்ட் அவர்கள் தானே தூக்கிட்டு இறந்ததாக மரண விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால், அவ ரது குடும்பத்தினர் ஒரு சுயாதீன விசாரணை கோரியுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி