ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் இருவர் கைது

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் இருவர் கைது

[2015-07-23 12:40]

சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் வைத்திருந்த இருவரை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தகவல் ஒன்று கிடைத்ததன் அடிப்படையில் கல்கிஸ்ஸை படோவிற்ற பகுதியில் குறிப்பிட்ட இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யும் போது குறிப்பிட்ட சந்தேகநபர்களிடம் 700 கிராம், 250 மில்லி கிராம், 100 மில்லி கிராம் அடங்கிய மூன்று பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி