ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
கொஸ்கம பஸ் விபத்தில் 65 பேர் படுகாயம்

கொஸ்கம பஸ் விபத்தில் 65 பேர் படுகாயம்

கொழும்பு- அவிசாவளை பிரதான வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 65 பேர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கொஸ்கம பொலிஸ் பிரிவில் தனியார் பஸ் ஒன்றும் இ.போ.ச. பஸ்ஸ¤ம் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த நபர்கள் சாலாவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி