ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
இரு இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பலி

இரு இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பலி

[2015-07-23 13:20]

இலங்கையைச் சேர்ந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளனர்.

குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் வேகமாக வந்த அம்பியுலன்ஸ் வண்டி மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இது பற்றி அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கையில், கங்கைகொண்டான் அகதிமுகாமைச் சேர்ந்த எம். தியாகராஜன் (42) மற்றும் அவரது நண்பர் கே. சசிகுமார் ஆகிய இருவரும் வேலைக்குச் சென்று திரும்பும் வழியில் இன்று (23) அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் சங்கர் நகரில் வைத்து மதுரை தள வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டியால் பின்புறமிருந்து தாக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்திலேயே தியாகராஜா உயிரிழந்ததோடு, திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் வைத்து சசிகுமார் உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அம்பியுலன்ஸ் வண்டி நோயாளி ஒருவரை திருவனந்தபுரத்தில் விட்ட பின் திரும்பும் வழியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிய வந்துள்ளதோடு, அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி