ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
தபால் மூலம் வாக்களிக்க 56,823 பேர் தகுதி

தபால் மூலம் வாக்களிக்க 56,823 பேர் தகுதி

[2015-07-23 14:30]

இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 56 ஆயிரத்து 823 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அதற்கான தபால் வாக்குகளை உறுதிப்படுத்தும் பணிகள் நேற்று (22) நிறைவடைந்துள்ளது. மேலும் தபால் மூல வாக்களிப்பானது இரு கட்டங்களாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி ஆசிரியர்கள், பொலிஸாருக்கு ஓகஸட் 3ஆம் திகதியும், ஏனைய அரச ஊழியர்கள் ஓகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.

அதிகளவான தபால் மூல வாக்காளர்கள் குருணாகல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மட் தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி