ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் சர்வதேச உறுப்புரிமைக்கு இடைக்காலத் தடை

இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் சர்வதேச உறுப்புரிமைக்கு இடைக்காலத் தடை

உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் சர்வதேச உறுப்புரிமைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுதுறை பணிப்பாளர் நாயகம் டீ.எஸ் ருவன்சந்திர இதனை உறுதிப்படுத்தினார்.

இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் யாப்பு சர்வ தேச பெட்மின்டன் சங்கத்தின் யாப்பு விதிகளை பின் பற்றும் விதத்தில் இல்லாததன் காரணமாக இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா கவும் விளையாட்டுதுறை பணிப்பாளர் நாயகம் குறிப் பிட்டுள்ளார்.

இதேNளை இலங்கை பெட்மின்டன் சங்கத்தில் அரசி யல் தலையீடு காணப்படுவதாகவும் சர்வதேச பெட் மின்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த தடையை எதிர்த்து நடவ டிக்கை எடுக்கமால் விட்டால் அடுத்த வருடம் பிரே ஸிலில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்கும் பட்மின்டன் வீரர்கள் போட்டி யில் பங்கு பற்றும் வாய்ப்பு தடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடைக் காலத் தடையை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

இலங்கை பட்மின்டன் சங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் திருப்தியளிக்க வில்லை அதனைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் சர்வதேச பட்மின்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி