ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
ஐ. ம. சு. மு.வின் தேர்தல் விஞ்ஞாபனம் 27ம் திகதி வெளியீடு

ஐ. ம. சு. மு.வின் தேர்தல் விஞ்ஞாபனம் 27ம் திகதி வெளியீடு

ஐ.ம.சு.முவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27ம் திகதி வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.‘ தேசத்தை உயிரூட்டு வோம், புதிதாக ஆரம்பிப்போம்’ என்ற தொனிப் பொருளில் ஐ.ம.சு.மு தேர்தல் விஞ்ஞாபனம் அமைய இருப்பதாக குறிப்பிட்ட அவர் விஞ்ஞாபனம் பூர்த்தி செய்யப்பட்டிருப்ப தாகவும் கூறினார்.

ஐ.ம.சு.மு. ஊடகவியலாளர் மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி தலை மையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர் ஐ.ம.சு.மு பிரசார நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெரும்பான்மையான மாவட்டங்களை ஐ.ம.சு.மு. கைப்பற்றும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தெற்கு, வடமேல், வடமத்திய மாகா ணங்களை ஐ.ம.சு.மு. நிச்சயமாக வெல்லும்.

வடக்கு, கிழக்கிலும் குறிப்பிடத்தக்க ஆசனங்களை கைப்பற்றும். ஐ.ம.சு.மு 117 விட கூடுதலான ஆசனங் களை கைப்பற்றும்.

கூடுதல் ஆசனம் பெறும் கட்சி பெயரிடும் நபரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். எம்மில் பெரும்பான்மை யானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என கோருகின்றனர்.

சிறுபான்மை பலமுள்ள கட்சிக்கு அதிகாரம் வழங்க முடியாது.

மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜா உரிமையை நீக்க வேண்டும் என ஜே.வி.பி. கோரியுள்ளது.

பிரஜா உரிமையை நீக்குமளவு அவர் என்ன தவறு செய்துள்ளார். பயங்கர வாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்தது தான் அவர் செய்த தவறா? ஐ.தே.க. ஆட்சியில் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் வழங்கப்படவில்லை என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி