ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
மஹிந்தவின் ஆட்சியில் திறைசேரியிலிருந்து புலிகளுக்கு கப்பம்

மஹிந்தவின் ஆட்சியில் திறைசேரியிலிருந்து புலிகளுக்கு கப்பம்

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தமிழ்க் கூட்டமைப்பு மீண்டுள்ளது

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் திறைசேரியில் இருந்து புலிகளுக்கு கப்பம் வழங்கப்பட்டது. தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ மீது புலிகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதையடுத்தே புலிகளுக்கு கப்பம் வழங்குவதை மஹிந்த ராஜபக்ஷ நிறுத்தியதாக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி செயலாளர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

தேர்தலையொட்டி சிலர் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கப் போவதாகவும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக 2005 ல் மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் ஆட்சியில் அமர்த்தவில்லை.

பிரபாகரனுடன் பேச்சு நடத்தவே அவர் நடவடிக்கை எடுத்தார். புலிகள் எமது படையினரை கொன்ற போதும் சரத் பொன்சேகா மீது குண்டுத் தாக்கல் நடத்திய போதும் கூட புலிகளுக்கு கப்பம் வழங்கப்பட்டது.

இவ்வாறு நடந்தவர்கள் இன்று பயங்கர வாதம் குறித்து பேசுவது நகைப்புரி யதாகும்.

புலிகளுக்கு எதிராக நாம் தான் அன்று குரல்கொடுத்தோம்.

மஹிந்தவின் ஆட்சியில் த.தே.கூ. வினுள் தான் புலிகள் இருந்தனர்.

அவர்களால் புலிகளை எதிர்க்க முடிய வில்லை. ஆனால் இன்று அவர் களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர். சம்பந்தன் இடமளிக்கவில்லை. பயங்கர வாதத்தின் பிடியிலிருந்து த.தே.கூ மீண்டுள்ளது.

ஜனநாயக வழிமுறையின் கீழ் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு செய்திருக்காவிட்டால் பாராளுமன்றத்திற்குள் அவர்க ளுக்கு செயற்பட வாய்ப்பு ஏற்பட் டிருக்கும்.

சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றி கொண்டு முன்னேற மைத்திரி - ரணில் கூட்டணிக்கு முடிந்தது.

நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக ரணில் எம்முடன் உடன்படிக்கை செய்துள்ளார் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி